(Reading time: 9 - 18 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

நீண்டுகிட்டு இருக்கிற கிளைகளை வெட்டி வீசிருவாங்க. ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் பூமியின் அடியாழத்தில் வேர் சுவரைத் தாண்டியும் போய்க் கொண்டிருக்கும். அதை என்ன பண்ண முடியும். ஒண்ணும் பண்ண முடியாது இல்லியா? இரு மனங்களுக்கு இடையில் காதல் முளைக்குது, அவங்க பார்க்கிறதையோ பேசறதையோ தடை செய்யலாம்.  ஆனால், அந்த காதலர்களின் இதயங்களில் அடியாழத்தில் இருக்கும் காதலை எப்படித் தடை செய்யமுடியும். இதை ஒரு அழகான உவமை வரிகளில்  இப்பாடலின் கவிஞர்  நா. முத்துக்குமார்  சொல்கிறார்.  இவ்வாறு  அவர் சொல்லிமுடிக்கவும் மாணவர்களின் பலத்த கைத்தட்டல் ஒலி எழுந்தது. “ஒரு தடவை சொல்வாயா!” பாடல் தன் வாழ்வோடு இணைந்த பாடலாகிவிட்டது என நினைத்தவள், விழா முடியவும் கல்லூரிப் பேருந்து இல்லாததால், தன் மற்ற தோழியருடன் தனியார் பஸ்ஸில் தாமதமாகவே வீடு சென்றாள். அம்மா  ரம்யாவின் தாமதத்தைப் பற்றி வருந்த ஆரம்பிக்கவும், ரம்யா வீட்டில் நுழையவும் சரியாக இருந்தது.  “ஏன் இவ்வளவு நேரம்?”என அம்மா கேட்க, காலைலேயே சொல்லிட்டு தானே அம்மா போனேன். இன்னிக்குத் தமிழ் மன்ற விழா இருக்குன்னு. முடிஞ்சதும் வர்றேன்.! ஆனால், ரொம்ப  லேட்டாகும்னு என்கிட்டே சொல்லவேயில்லையே. முதன்முறையா நடத்துறாங்கம்மா, அவங்க நேரப்படிலாம் கரெக்டா நடத்தல, பட்டிமன்றம்லாம் ரொம்ப நேரம் போச்சு.. உங்களுக்குத் தெரியுமா, சிறப்புப் பேச்சாளாரா வந்த தமிழரசு சூப்பரா பேசினாரு, அவர் எங்களைக் கடந்து போனப்ப என் நோட்டில அவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்கினேன் என்று தன்னுடைய நோட்டை எடுத்து அதன் கடைசிப் பக்கத்தைக் காட்டினாள். அதைப் பார்த்து வியந்த அம்மா, அவள் பொய் சொல்லவில்லை என்றுணர்ந்தவராய் இரவு உணவைத் தயாரிக்க சென்றார். ரம்யா அமைதியாக தனது கல்லூரி வேலைகளைச் செய்யத் தொடங்கும்போது அம்மா, அவளைப் பற்றித் தவறாக  எண்ணிக் கவலைப்படுவதை விட்டார்.

இரவு 8 மணி. போனில் இரண்டு முறை அழைப்புகள், இருமுறையும் அம்மா எடுக்கையில் அவை  பிளான்க் கால். மூன்றாவது முறையாக அம்மா எடுத்தபோது, ​​எதிர்முனையில் சத்யாவின் குரல். என்னம்மா நீ தானா சத்யா? ரெண்டு தடவை நான் எடுத்தேன், பேசலியே நீ என்று சொல்லவும், சுதாரித்த சத்யா, ரம்யாவைக் காப்பாற்றும் விதமாய், நான் தான் ட்ரை பண்ணேன் ஆன்ட்டி. கால் சரியா கனெக்ட் ஆகல எனக்கு நீங்க பேசினதே கேட்கல என்றாள். இரும்மா ரம்யாவைக் கூப்பிடறேன் என்றார். ஏற்கனவே தினேஷின் காலை அம்மா அட்டென்ட் பண்ண பதட்டத்தில் இருந்தவள் விரைந்து சென்று ரிசீவரை வாங்கினாள். “தேங்க்ஸ்டி சத்யா! என்னை இன்னிக்குக் காப்பாத்திட்ட! என்ன விஷயம்! இப்போ கால் பண்ணிருக்க!” ஒரு அசைன்மென்ட்காக ஒரு கட்டுரை எழுதணும், நான் எழுதி முடிச்சிட்டேன் நீ தாண்டி கிராமர் செக் பண்ணித் தரணும். எப்போ? நாளைக்கு ஈவ்னிங் வேணும். முடியுமா? காலைல உன்கிட்ட

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.