(Reading time: 9 - 18 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

கேட்டு வாங்கிட்டு வருதோ என்னமோ?” வேண்டுமென்றே அவனைச் சீண்டினாள் கோகிலா.

“க்கும்...இந்த மூஞ்சியைத் தேடிட்டு யாரு வருவாங்க?...”என்று தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டான் ரவீந்தர்.

“ஏன்?...உங்களுக்கென்ன?...ராஜா மாதிரி இருக்கறீங்க?” என்றாள் கோகிலா.

“போக்கிரி ராஜாவா?...தனிக்காட்டு ராஜாவா?”

“கவிதை ராஜா” என்றவள், “ஓ.கே....பை..”என்று சொல்லி விட்டு இணைப்பிலிருந்து வெளியேற, குளியலறை நோக்கி ஓடினான் ரவீந்தர்.

இருபது நிமிடத்தில் ரெடியாகி, அவசரமாய் வெளியேறும் போது, தன் வீட்டின் பக்கவாட்டில் தானே அமைத்திருந்த கீரைப் பாத்தியின் முன் அமர்ந்து கீரையைக் கிள்ளிக் கொண்டிருந்த வத்சலா, சட்டென்று தன்னை மறைத்துக் கொண்டாள்.

அவளின் அந்தச் செய்கையில் முகம் வாடிப் போனான் ரவீந்தர்.  “ஏன்?...ஏன் அப்படிச் செய்தாள்?...நேத்திக்கு என் கூட “கல...கல”ன்னு பேசினாளே?...இன்னிக்கு என்னாச்சு?”

வழியெல்லாம் யோசித்துக் கொண்டே சென்றான்.  அவனையும் மீறி அவன் முகம் சோகத்தைப் பூசிக் கொண்டது.

அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்து லாப்டாப்பைத் தடவிக் கொண்டிருந்தவன் மேசைக்கு எதிரில் யாரோ வந்து நிற்பது தெரிய, அசுவாரஸியமாய்த் தலையைத் தூக்கினான்.

கோகிலாவும், காவ்யாவும் நின்றிருந்தனர்.

“சார்...மீட் மிஸ் காவ்யா...நம்ம பிராஞ்சுக்கு புது ஸ்டாப்!...உங்களுக்கு பழைய ஸ்டாஃப்” என்று கோகிலா சொல்ல,

எழுந்து நின்று, “ஹலோ” என்றவாறே தன் கையை நீட்டினான் ரவீந்தர்.  அதைச் சற்றும் எதிர்பாராத காவ்யா சந்தோஷமாய்க் கை குலுக்கினாள்.  அந்தக் குலுக்கல் அவளுக்குள் ஒரு பனி மலையைக் கொண்டு வந்து கரைக்க, சிலிர்த்துக் கொண்டாள்.

கோகிலாவின் முகம் இருண்டு போனது. சட்டென்று அங்கிருந்து நகர்ந்து அடுத்த இருக்கைக்கு சென்றாள்.

“என்ன மேடம்?...நீங்க வாலண்டரியா டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்ததா சொன்னாங்களே?...ஏன்?...உங்களுக்கு கோயமுத்தூர்தானே நேட்டிவ்?...ஃபேமிலியெல்லாம் அங்கதானே இருக்காங்க?...அப்புறம் ஏன் இந்த மாற்றல்?” ரவீந்தர் சாதாரணமாய்க் கேட்டான்.

பதிலேதும் சொல்லாமல் கவர்ச்சியாய்ப் புன்னகைத்த காவ்யா, “கோயமுத்தூர் என் நேட்டிவ்...ஓ.கே.!...ஆனா அடுத்து ஒண்ணு சொன்னீங்களே?...“ஃபேமிலியெல்லாம் அங்கதானே இருக்காங்க?”ன்னு...அது ஓ.கே...இல்லை!” என்றாள் காவ்யா.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.