This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
ராமசாமி குழப்பம் அடைந்தார். அவர் சிவக்குமாரை மேனகாவிற்கு பேசலாம் என்ற யோசனையில் இருந்தார்.
“அபிலாஷா?” – அவர் உதடுகள் குழப்பத்துடன் கேள்வியையும் கேட்டது.
“ஏன் சந்தேகமா கேட்குறீங்க?” – கேசவன்.
“நான் சிவக்குமாரை மேனகாக்கு பேசலாம்னு நினைச்சேன் கேசவா. சிவக்குமார் குணம் அருமையா இருக்கு. அபிலாஷ் எப்படின்னு புரியலையே. அப்சரா சொல்றதை பார்த்தா அவன் குணம் மேனகாக்கு சரிப்பட்டு வருமான்னு கேள்வி வருது” – ராமசாமி கேசவன் மீதிருந்த நம்பிக்கையால் மனதிலிருப்பதை மறைக்காமல் சொன்னார்.
“சிவக்குமார் தம்பியும் சரி, அபிலாஷ் தம்பியும் சரி இரண்டுப் பேரும் நல்ல மாதிரி தாங்க. சிவக்குமார் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அபிலாஷ் தீபக் இரண்டு பேரும் பரம்பரை பணக்காரங்க. அபிலாஷ் தம்பி பத்தி பட்டும் படாமலும் முன்னேயே கேட்டேங்க. அவரு கலாட்டாவா பேசுவாரே தவிர வேற ஒன்னும் இல்லைன்னு தீபக் தம்பியே சொன்னார்.
அபிலாஷ் தம்பி வீட்டுக்கு ஒரே மகனாம். நம்ம மேனகா ம்மா அவரை கல்யாணம் செய்துக்கிட்டா ராணி போல வாழலாம்.”
“இவ்வளவு செய்தியை சேர்த்து வச்சிருக்க. உனக்கு எப்படி இதுக்கு நேரம் கிடைச்சது?”
“அவங்க வேலை செய்த நேரத்துல பேசி தெரிஞ்சுக்கிட்டேன்ங்க”
“போட்டு வாங்கிட்டேன்னு சொல்லு! உன் திறமை யாருக்கு வரும்!” – ராமசாமி கேசவனை பாராட்டி சிரித்தார். அதுவே அவர் தெளிவான மனநிலைக்கு வந்துவிட்டதை காட்டியது.
“இன்னைக்கு விருந்தை தடபுடலாக்கு கேசவா. அபிலாஷ் நம்ம வீட்டு மருமகனா வரப் போறவரு. இந்த முதல் விருந்தை அவர் மறக்கவே கூடாது”
“சரிங்க. நான் ராகவன் கிட்ட இப்போவோ சொல்றேன்.”
கேசவன் போன பிறகும் ராமசாமி அவர் சொன்ன செய்தியை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.
எதற்கும் அபிலாஷ், சிவக்குமார், தீபக் பற்றி முழு விபரங்கள் தெரிந்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தார். சென்னையில் இருந்த தன் நண்பர்களை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு பேசினார்.
கோபாலுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது. தோட்டத்தில் அவன் தெரிந்துக் கொண்ட லேட்டஸ்ட் செய்தியை யாரிடமாவது பேசி விட வேண்டும் என்று விரும்பினான். அதை விட அதை வைத்து ஆதாயம் தேட முடியுமா என்று ஆராய்ந்தான்.
தீபக் - அபிலாஷ் – சிவக்குமார் மூன்றுப் பேரும் அவர்களின் நட்பு வட்டத்துக்குள் வேறு