தாயின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த மதுமதியோ
”அம்மா நீங்களா” என வியப்புடன் கேட்க
”நானேதான்மா உங்கப்பா என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டார்ன்னு தெரியுமா உனக்கு” என கேட்க மதுமதியோ
”நீ அழகாயிருக்க, நல்லா சமைக்கற, அருமையா பாட்டு பாடுவ, உனக்கு பரதநாட்டியம் கூட வரும், அமைதியான அடக்கமான பொண்ணு நீ, அதனால அப்பா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு”
”அதான் இல்லை, நான் அடக்கமான பொண்ணுதான் அதோட நான் ஒரு ஏழை வீட்டு பொண்ணு, என் அழகை பார்த்து என்னை கல்யாணம் பண்ணிக்க நிறைய பேர் வந்தாங்க, ஆனா அவங்க கேட்ட வரதட்சனையை என் அப்பாவால தரமுடியலை, அந்த சமயம் உன் அப்பா வந்தாரு வரதட்சனை எதுவும் வேணாம்னு சொன்னாரு, நாங்க சந்தோஷப்பட்டோம் கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது, அப்புறம்தான் தெரிஞ்சது, என்னை ஏன் அவர் தேர்ந்தெடுத்தார்ன்னு,
அவருக்கு பிடிச்ச மாதிரி ஒரு மனைவி வேணும், அவர் சொல்றதை கேட்கனும் அவர் காலடியில கிடக்கனும், நில்லுன்னா நிக்கனும், உட்காருன்னா உட்காரனும், நான் ஏழைங்கறதால அவர் என்னை கஷ்டப்படுத்தினாலும் கேள்வி கேட்டோ நியாயம் கேட்டோ யாரும் வரமாட்டாங்க, ஏன்னா வரதட்சனை வாங்காம என்னை கல்யாணம் பண்ணதே பெரிய விசயம்னு எங்கப்பா நினைச்சி இப்ப வரைக்கும் உன் அப்பாவை கடவுளா நினைக்கறாரு, அந்த கடவுள் என்னை கஷ்டப்படுத்தறதா நானே சொன்னாலும் என் அப்பா நம்பமாட்டாரு
உன் அப்பாவுக்கு என்ன தேவை, அவருக்கு சேவை செய்ய ஒருத்தி வேணும் அவர் சாப்பிடறதுக்கு சாப்பாடு செஞ்சி தரனும், அவர் துணியை துவைக்கனும், வீட்டு வேலையை செய்யனும், அவருக்கு பிடிச்சமாதிரி நடந்துக்கனும், அவருக்கு பொழுது போகனும்னா பாட்டு பாடனும், டான்ஸ் ஆடனும், அவர் பேர் சொல்ல ஒரு குழந்தையை பெத்துக் கொடுக்கனும், அவ்ளோதான்மா இதை மட்டும்தான் அவர் என்கிட்ட எதிர்பார்த்தாரு
ஆனா இதுல என்னோட விருப்பங்கள், ஆசைகள் எதுவுமே அவரு கேட்டதில்லை, தெரிஞ்சிக்கவும் நினைச்சதில்லை, அழகான பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு வீட்லயே அடக்கி வைச்சாரு, வெளியவே கூட்டிட்டு போனதில்லை, வீடே கோயில்னும் அவரே கடவுள்ன்னும் சொல்லி சொல்லி என்னை பழக்கப்படுத்தினாரு
நீ பிறந்தப்ப அவர் ரொம்ப வருத்தப்பட்டாரும்மா, ஆண் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டாரு ஆனா, நீ பொண்ணா பிறக்கவும் வெறுத்தாரு, அதனாலதான் சின்னப்ப இருந்து இப்ப