பூர்வி மெல்ல எட்டிப் பார்த்தாள். திவேஷ் போனில் பேசிக் கொண்டே லேப்டாப்பை திறந்துக் கொண்டிருந்தான். பூர்வி சத்தம் எழுப்பாமல் அவளின் லேப்டாப் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். லேப்டாப்பில் மீண்டும் log வின்டோவை திறந்துப் பார்த்தாள். திவேஷ் இப்போதும் மார்ஸ் வங்கியின் வெப்சைட்டை திறந்திருப்பதை log காட்டியது. பூர்வி அவளே code எழுதி இன்ஸ்டால் செய்த சர்வரிடம் கவனத்தை திருப்பினாள். திவேஷ் அவன் லேப்டாப்பில் வங்கியின் வெப்சைட் என்று நினைத்து பிரவுஸ் செய்துக் கொண்டிருந்தது பூர்வி தயார் செய்திருந்த வெப்சைட்.
திவேஷ் என்ன வேறு நிபுணனாக இருந்தாலும் எளிதில் அது போலி வெப்சைட் என்று கண்டுபிடித்திருக்க முடியாது. அத்தனை தத்ரூபமாக மார்ஸ் வங்கி வெப்சைட்டை தழுவி உருவாக்கி இருந்தாள். ஒவ்வொரு கம்யூட்டரிலும் ஹோஸ்டஸ் என்று ஒரு பைல் இருக்கும். திவேஷ் கம்ப்யூட்டரில் அதை பூர்வி மாற்றி இருந்தாள். திவேஷ் மார்ஸ் வங்கி வெப்சைட் திறந்தால் இந்த புது ஹோஸ்டஸ் பைல் அதை பூர்வி உருவாக்கி இருந்த வெப் பேஜ்களை காட்டும். அதற்கான சர்வரை தன் லேப்டாப்பில் வைத்திருந்தாள் பூர்வி. வெப் அட்ரஸ் மாறாமல் புது பேஜ் மட்டும் லோட் ஆவதுப் போல தன்னுடைய பேஜ்களை வடிவமைத்திருந்தாள்.
திவேஷின் யூசர் ஐடி, பாஸ்வோர்ட் தெரிந்த உடனேயே அவன் கம்ப்யூட்டரில் தன்னுடைய பக்கங்கள் வருவதுப் போல இயங்க சர்வரை மாற்றி இருந்தாள். அதற்கு முன்பே மொபைல் நம்பர், ஈமெயில் என அனைத்து ப்ரோபைல் விபரங்களையும் திவேஷ் அக்கவுன்ட்டில் மாற்றி விட்டாள்.
திவேஷ் இப்போது என்ன செய்கிறான் என்று logல் கவனித்தாள். அவன் அமவுண்ட் ட்ரான்ஸ்பர் செய்துக் கொண்டிருந்தான். ஜீனா பணத்தை டெபாசிட் செய்து போன் செய்து தகவல் சொல்லி இருக்க வேண்டும். உடனே அதை தன் அக்கவுன்டிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறான். இவன் ஜீனாவை என்ன செய்வான்? வேண்டிய அளவிற்கு பயன்படுத்தி விட்டு நட்டாற்றில் விட்டு விட திட்டம் வைத்திருப்பானோ? ஜீனா தெரிந்தே ஆள் மாறாட்டம் செய்து பண பரிவர்த்தனைகள் செய்கிறாள். அவளை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவளுடைய பொறுப்பு. பூர்வி அதை பற்றி யோசிப்பது அவசியமில்லை.
பூர்வி திவேஷ் அக்கவுண்டில் இருந்து ஒரு நாளுக்கு அனுமதி அளிக்கப் பட்டிருந்த அளவு பணத்தை தன் அக்கவுன்டிற்கு மாற்றும் வேலையில் ஈடுப்பட்டாள். இன்னும் மூன்று நாட்கள் போதும். பூர்வி திட்டமிட்ட காரியம் சரியாக முடிந்து விடும்.
பூர்வி தீவிரமாக அமவுண்ட் ட்ரான்ஸ்பர் செய்வதில் ஈடுப் பட்டிருந்ததால் திவேஷ் வந்ததை