ஸ்வேதாவை பார்த்ததும் என்ன சொல்வது என்று புரியாமல் ஜனனி திகைத்து நிற்க ஓரிரு நொடிக்குள் தன்னை சுதாரித்து கொண்ட ஜனா, வா... ஸ்வேதா... உள்ளே வா என்று அழைக்க ஜனனியை தாண்டி உள்ளே சென்றாள்.
ஜனனி எதுவும் பேசாமல் கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள். ஆனால் என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டம் மட்டும் குறையவில்லை.
சில நிமிடங்கள் அப்படியே நின்றவள் வீட்டிற்கு வந்தவர்களை வா என்று கேட்க வேண்டும். அதையும் செய்யவில்லை... சரி குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டுமே என்ற யோசனையுடன் ப்ரிட்ஜ் கதவை திறக்க வெளியே ஜனா பேசுவது ஜனனியின் காதில் தெளிவாக விழுந்தது.
ஸ்வேதா... என்ன குடிக்கிற... கூல் ஆர் ஹாட் என்றவன் அவள் பதில் சொல்வதற்குள் ஜானு போடுற டீ ரொம்ப ஸ்பெஷல்... அதனால் டீ சொல்றேன் என்றவன் ஜானு என்று சொல்லவும் இதோ எடுத்து விட்டு வருகிறேன் என்று பதில் கொடுத்தவளுக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு பொங்கி வழிந்தது.
இதுவரை தன் பெயர் அவனுக்கு தெரியுமா என்று ஜனனி யோசித்தது உண்டு. ஆனால் இன்று அவள் பெயரை சுருக்கி அவன் ஜானு என்று கூப்பிட்டது அவளுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்தது.
தேநீர் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் ஸ்வேதாவின் முன்பாக நீட்டினாள். அதே நேரத்தில் சாத்தியிருந்த கதவை திறந்துகொண்டு அம்மா என்று குதித்து ஓடி வந்தாள் தனு.
தனுவை அந்த நேரத்தில் எதிர் பார்க்காத ஜனனி டிரேயை கீழே வைத்துவிட்டு தனுவை தூக்கிக் கொண்டு, தனுமா... இந்த நேரம் என்று கேட்பதற்குள் நானே பதில் சொல்கிறேன் என்றவாறே உள்ளே நுழைந்தான் அஸ்விட்.
நீ ஏண்டா பாதியிலேயே ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்திருக்க... அந்தளவுக்கு என்ன அவசரம் என்று ஜனா கேட்க அப்பொழுதுதான் அங்கு அமர்ந்திருந்த ஸ்வேதாவை பார்த்தான் அஸ்விட்
ஸ்வேதாவை பார்த்ததும் அவன் முகத்தில் வந்த உணர்வு என்னவென்று ஜனனியால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் எதுவும் பேசாமல் திருமணத்திற்கு டிரஸ் எடுக்க இன்று போகலாம் என்று ஸ்வீனா சொன்னாள். அதனால் தான்... முதலில் குட்டீஸ் எடுத்துவிடலாம் என்று தான் தனுவை அழைத்து வந்து விட்டேன், பெரியவங்க நேரடியாக கடைக்கு வந்து விடுவார்கள் என்றான்..
ஆனால் இன்று ஆபிஸில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது. நாங்கள் எப்படி வருவது என்று ஜனா கேட்க நீயும் ஜனனியும் மீட்டிங் முடித்துவிட்டு வாருங்கள். நாங்கள் முதலிலேயே
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Look forward to see wat happens next.
Thank you.
Randu perkitaum nerave Swetha solirukalame
Iva eduku ipa pack pandra