(Reading time: 5 - 9 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 16 - முகில் தினகரன்

ன்று இரவு ரவீந்தரும், சுதாகர்ஜியும் கோவையிலேயே ஒரு ஹோட்டலில் தங்கினர்.

“என்னப்பா  “ராத்திரி போயிடலாம்!”னு சொன்னே?...கடைசில இங்கியே தங்க வெச்சிட்டியே?” சுதாகர்ஜி கேட்க,

“காரணத்தோடதான் ஜி” என்ற ரவீந்தர், மொபைலை எடுத்து யாருக்கோ கால் செய்தான். “ஓ.கே..ரூம் நெம்பர் 56...உடனே வந்திடு”என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தவன், “நம்ம டிராமாவுக்கு அடுத்த கேரக்டர் வருது” என்றான்.

“யாரு?” கண்களைச் சுருக்கிக் கொண்டு சுதாகர்ஜி கேட்க,

“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க ஸ்வாமிஜி”

“டிங்..டாங்!...”காலிங்பெல் ஒலிக்க, “வந்தாச்சு அடுத்த கேரக்டர்” என்றபடியே சென்று கதவைத் திறந்தான் ரவீந்தர்.

உள்ளே நுழைந்த நடுத்தர வயது மனிதர் ரவீந்தரைப் பார்த்ததும், வெள்ளைக்காரன் ஸ்டைலில் கட்டிப் பிடித்து விட்டு, “என்ன ரவி...ஆளைப் பார்க்கவே முடிய மாட்டேங்குது” கேட்டார்.

“முதல்ல உட்காருங்க கோகுல்”

அந்த கோகுல் கட்டிலின் முனையில் அமர, அவரைப் பார்வையால் அளந்தார் சுதாகர்ஜி.  “யார் இந்த ஆளு?...தலைக்கும் மீசைக்கும் “கரு...கரு”ன்னு டை அடிச்சுக்கிட்டு, அந்தக் காலத்து ஹிப்பிக போடற மாதிரி பூப்போட்ட சட்டை போட்டுக்கிட்டு ஆளைப் பார்த்தாலே அவ்வளவு மதிப்பா தெரியலையே?”

“அப்புறம்...இப்பவும் நாடகம்தான் போட்டுட்டு இருக்கீங்களா கோகுல்?” ரவீந்தர் கேட்க,

“ஆமாம்...இதுவரைக்கும் தொண்ணூத்தி ஏழு டிராமா போட்டாச்சு...செஞ்சுரி அடிக்க இன்னும் மூணு டிராமா போடணும்” என்றவர், “அது செரி...எதுக்கு திடீர் அழைப்பு?” கேட்டார்.

“உங்களால் ஒரு உதவி ஆகணும்”

“ம்...சொல்லுப்பா” என்றார் கோகுல்.

சுதாகரைப் பற்றியும், அந்த உப்பாயம்மன் கோயில் பற்றியும், நேற்று தான் செய்து விட்டு வந்த டிராமா பற்றியும் சொல்லி விட்டு, “நான் முதல் காட்சி நடிச்சிட்டேன்...அடுத்த காட்சி நீங்கதான் நடிக்கணும்” என்றான் ரவீந்தர்.

“அய்யய்ய...என்னால் முடியாது!...ஏதோ நேர்மையா டிராமா போட்டு பொழைப்பை ஓட்டிக்கிட்டிருக்கேன்...நீ அதுக்கும் ஆப்பு வெச்சிடுவே போலிருக்கே?” பயந்தார் கோகுல்.

“கோகுல் சார்!...இதுல பயப்பட ஒண்ணுமேயில்லை...நாம எந்த தப்பும் செய்யலை...ஜஸ்ட் ஒரு கோவிலுக்கும்...ஒரு சாமிக்கும் மார்க்கெட்டிங் பண்றோம்...அவ்வளவுதான்!..இப்ப....பெரிய பெரிய சாமியார்களெல்லாம் டி,வி.ல ஸ்பான்ஸர் புரோக்ராம் பண்ணி தங்களுக்குத் தாங்களே

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.