(Reading time: 5 - 9 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

மார்க்கெட்டிங் பண்ணிகறாங்க இல்லை?...அதே மாதிரிதான்” தைரியமூட்டினான் ரவீந்தர்.

சில நிமிடங்கள் யோசித்த கோகுல், “சரிப்பா...சரிப்பா...உனக்காகச் செய்யறேன்...சொல்லு” என்றார்..

“ஒன் மினிட்...” என்று  சொல்லி விட்டு தன் பேக்கைக் குடைந்து அதை வெளியிலெடுத்தான் ரவீந்தர்.

மஞ்சள் நிறத் துணியில் எதையோ பொட்டலம் போட்டு வைத்திருந்தான்.

“என்னப்பா அது?” சுதாகர்ஜி கேட்க,

“ஒண்ணும் இல்லை...கொஞ்சம் விபூதியையும்...குங்குமத்தையும் உள்ளே வெச்சு பொட்டலம் கட்டியிருக்கேன்!...நீங்க என்ன பண்றீங்க ஜீ...நாளைக்கு காலைல கோயிலைத் திறந்ததும்...இதைக் கொண்டு போய் கோயிலுக்குப் பின்னாடி இருக்கற...அந்த அரச மரக்கிளைல கட்டி வெச்சிடுங்க!...” என்ற ரவீந்தர் கோகுலைப் பார்த்து, “நீங்க...மாலை ஆறு மணி வாக்குல கோயில்ல கொஞ்சம் மக்கள் கூட்டம் இருக்கும் நேரம் பார்த்து உள்ளார போறீங்க!.....அப்ப சுதாகர்ஜி வேறொருத்தர் கிட்ட உங்களைக் காட்டி, “அவன் வேற குலத்துக்காரன்...நம்ம கோயிலுக்குள்ளார வந்து ரொம்ப நேரமா நடமாடிட்டிருக்கான்”னு சொல்லுவார்!...உடனே அவங்க உங்களைப் பிடிச்சு மிரட்டுவாங்க!...” என்று சொல்ல,

“அடிச்சிட மாட்டாங்கல்ல?” அழுவது போல் கேட்டார் கோகுல்.

“சொல்ல முடியாது...அடிச்சாலும் அடிக்கலாம்!...வேற வழியில்லை பொறுத்துக்கங்க!...இங்க பாருங்க நான் எத்தனை காயங்கள் வாங்கியிருக்கேன்!னு”என்று தன் காயங்களைக் காட்டினான் ரவீந்தர்.

“சரி...மேலே சொல்லு” என்றார் கோகுல்.

“அவங்க வந்து உங்களை மிரட்டும் போது... “ரொம்ப நாள் குழந்தையே இல்லாமலிருந்த எங்களுக்கு இங்க வந்து...இந்த வேண்டுதலைக் கட்டிட்டுப் போன பிறகுதான் மனைவி கர்ப்பமானாள்...இப்பக் குழந்தையும் பிறந்திடுச்சு”னு அடிச்சு விடுங்க!...கூட உங்க சொந்த டயலாக்கையும் சேர்த்து விடுங்க”

“ஓ.கே...தூள் கிளப்பிடறேன்” என்றார் கோகுல்.

“அப்ப நாம கிளம்பலாமா ஜி?” ரவீந்தர் கேட்க,

“என்னப்பா?...ராத்திரி இங்கியே தங்கிட்டு...காலைல போகலாம்!னு சொன்னே?...இப்ப திடீர்னு கிளம்பலாம்!கறே?”

“அட...இங்க இருக்கற பொள்ளாச்சிதானே ஜி?..போயிடலாம் ஜி!...இப்ப மணி என்ன?...எட்டே கால்...எப்படியும் பத்து மணிக்கு நம்ம வீட்டுக்குப் போயிடலாம்!...போனால்தான் காலைல நீங்க

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.