This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“சித்தி நல்லவங்க மேடம். என்னை அம்மாவா பார்த்துக்கிட்டாங்கன்னு சொல்லலாம்” – அமுதவள்ளி ராதாவை பற்றி சுருக்கமாக சொல்லி முடித்தாள்.
அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றமும், அவள் பேசிய விதமும் அமுதாவிற்கு அதைப் பற்றி பேச விருப்பமில்லை என்பதை பானுமதிக்கு புரிய வைத்தது. சில நாட்களிலேயே நெருக்கமாக உணரத் தொடங்கி விட்ட அந்த இளம்பெண்ணைப் பற்றி எல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதை அப்போதைக்கு அடக்கி வைத்தார்.
பேச்சை வானிலை, இயற்கை என்று வேறு பக்கம் திருப்பினார். அமுதாவும் அந்த மாற்றத்தை விருப்பத்துடன் அங்கீகரிப்பது அவருக்குப் புரிந்தது.
அமுதவள்ளி பானுமதியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள் என்று சொன்னால் அது தவறே கிடையாது. ஆனாலும் கதிர் மாலையில் விடியோ கால் வழியே அம்மாவிடம் விசாரித்தான். கதிருடன் பானுமதி பேசிய போது அமுதவள்ளி பக்கத்தில் தான் இருந்தாள். அம்மாவும் மகனும் பேசட்டும் என அமுதவள்ளி எழுந்திருக்க, பானுமதி அவளை அங்கேயே இருக்க சொன்னார்.
“மாத்திரை எல்லாம் சாப்பிட்டீங்களாம்மா?” – கதிர் கேள்வி கேட்டது என்னவோ பானுமதி இடம் என்றால் அவன் பார்வை அமுதாவிடம் இருந்தது. அதற்கான காரணம் அமுதவள்ளிக்கு புரிந்தது. எனவே கண்டுக்கொள்ளாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதிர் கிளம்பும் முன் பானுமதி பொதுவாக எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் விபரம் பற்றி அமுதவள்ளி அவனிடம் விசாரித்தாள். கதிர் அந்த விபரங்களை அவளிடம் பகிர மறுத்து விட்டான்.
“இங்கே பார், உன் வேலை அம்மா சொல்றதை செய்றது மட்டும். அம்மா உன் கிட்ட மருந்து பத்தி பேசினா கேட்டுக்கோ. மத்தபடி இப்படி ரொம்ப அக்கறை இருக்க மாதிரி காட்டிக்க இதை எல்லாம் நீ என் கிட்ட கேட்கனும்னு கிடையாது. இந்த மாதிரி ஷோ காட்டுறவங்க எத்தனையோ பேரை நான் பார்த்தாச்சு” – கதிர் வேண்டுமென்றே முகத்தில் அடித்ததுப் போல அவளிடம் பதில் சொல்லி இருந்தான்.
அன்று இரவு தூங்க போகும் முன் பானுமதியிடம் மருந்துகள் பற்றி கேட்க நினைத்த அமுதவள்ளி, வேண்டாம் என்று முடிவு செய்து கேட்காமல் விட்டாள். ஆனால் எதனாலோ அவளுக்குள் ஒரு மாதிரியான பரபரப்பு இருந்துக் கொண்டே இருந்தது.
என்ன என்று புரியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள் விடிகாலை இரண்டு மணி போல சின்னதாக எதுவோ சத்தம் கேட்கவும் உடனே எழுந்து அமர்ந்தாள். என்ன என்று புரியாவிட்டாலும் எதுவோ உந்த பானுமதியின் அறை பக்கம் சென்றாள்.
But amudha ingaye permanent employee aga ready irukanga pole 😁😁 Aunty oda padam towards ammu is ponging 😍😍nalla chellam konjuranga 😍
Andha prajay-i ena panittu vandhanga???? Look forward to see what happens next.
Thank you.