(Reading time: 8 - 16 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

உனக்கு?...மரணத்தைத் தேடிப் போக என்ன அவசியம்?”ன்னு என்னைப் பார்த்து ஆத்தாவே கேட்பது போல் ஒரு  “கணீர்”க் குரல் எனக்குள் ஒலிக்க, கண்ணீர் சிந்திக் கதறினேன்!...“திருமணமாகி எட்டு வருஷமாச்சு ஆத்தா...இன்னும் என் சம்சாரம் உண்டாகலை ஆத்தா!...ஊரே ஏசுது...உறவுகள் பேசும் பேச்சில் மனசு கூசுது!...அதனால்தான் சாவைத் தேடிப் போறேன் ஆத்தா”ன்னு என் மன ஆதங்கங்களைக் கொட்டினேன்!...”

எல்லோரும் கண்ணிமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

“என் கண்ணீரைப் பார்த்த ஆத்தா...“கவலைப்படாதே...என் சன்னதிக்குப் பின்னாடி இருக்கற அரச மரத்துல உன் கோரிக்கையைக் கட்டு...அடுத்த பௌர்ணமியில் உனக்கு சந்தோஷம் வரும்” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்!...நானும் ஆத்தா பேச்சை முழுசா நம்பி என் கோரிக்கையை எழுதி மஞ்சள் துணில கட்டிட்டுப் போனேன்!...அவ சொன்ன மாதிரி பௌர்ணமியன்னைக்கு என் சம்சாரம் வாந்தியெடுத்தா...டாக்டர் கிட்டே போய் செக் பண்ணியதில்...அவ உண்டாயிருந்தா!...போன மாசம் எங்களுக்கு ஒரு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்திடுச்சு!...தாயும் சேயும் ரொம்ப நல்லாயிருக்காங்க!...அதான் என் நன்றியைச் சொல்ல இங்க மறுபடியும் வந்து ஆத்தாவை வணங்கினேன்!...நான் செய்தது தப்பா?” எல்லோர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கேட்டான் கோகுல்.

மெலிதாய்ப் புன்னகைத்த சுதாகர்ஜி தன் குலத்தைச் சேர்ந்த மற்றவர்களைப் பார்த்து, “இவர் சொல்வது உண்மையான உண்மைதான்!...சில மாதங்களுகு முன்னாடி ஒரு காலை நேரத்துல நான் கோயிலுக்குப் பின்னாடி போய்ப் பார்த்தப்ப...மரத்துல ஒரு மஞ்சள் துணி கட்டப்பட்டிருந்தது...அப்பவே நான் யோசிச்சேன்.. “இது என்ன புதுப் பழக்கமாயிருக்கு?”ன்னு....ஆனாலும் “யாரோ நம்பிக்கையோட கட்டியிருக்காங்க...அவங்க நம்பிக்கையை நாம ஏன் கெடுக்கணும்!”ன்னு அப்படியே விட்டுட்டேன்!...இப்ப இவர் சொன்னதும்தான் உண்மையெல்லாம் தெரியுது!...நாமதான் நம்ம உப்பாயம்மனை நம்ம குல தெய்வம்!”னு சொல்லிட்டிருக்கோம்!..ஆனா..ஆத்தா எல்லா குலத்தைச் சேர்ந்தவங்களுக்கும் அருள் தந்திட்டுத்தான் இருக்கா!....அதனால...எனக்கொரு விஷயம் தோணுது...இப்ப இவருக்கு நடந்த இந்த ஆன்மீக அனுபவத்தை எல்லோருக்கும் சொல்லுவோம்!...நம கோவிலுக்கு எல்லா குலத்து மக்களும் வரட்டும்!...தெய்வத்திற்கு முன்னாடி எல்லோரும் ஒண்ணுதானே?” என்று சொல்ல,

அவர் பேச்சுக்கு மறு பேச்சே எழவில்லை.

“ஸ்வாமி...இதை நானே எல்லோர் கிட்டேயும் சொல்லப் போறேன்...கோயமுத்தூர் போய் டி.வி.யிலெல்லாம் கூட சொலப் போறேன்!...இந்த உப்பாயம்மனோட அருமை பெருமைகளை இந்த உலகத்துக்கு எடுத்துச் சொல்றதுதான் இனி மேல் என்னோட கடமை” என்றான் கோகுல்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.