ராகவனது வீட்டிலிருந்து எப்படியும் வண்டி வாங்கும் கடையானது முக்கால் மணி நேரத்தில் வந்துவிடும் அதற்காக கதிரவன் ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டான், அவ்வளவு மெதுவாக பகுமானமாக மதுமதியை அழைத்துக் கொண்டு கடை ஒன்றின் முன் நின்றான். வண்டி நின்றது கூட அறியாமல் இருந்த மதுமதியைக்கண்டு கிண்டலாகச் சிரித்தபடியே
”மது” என அழைத்தான் அவளோ கண்கள் மூடியபடியே
”ம்” என இழுத்தாள்.
அவளின் அந்த இழுப்பு அவன் மனதை கிறங்கடித்தது. ஒரு நொடி தப்பான எண்ணம் அவன் மனதில் தோன்றி மறைய அடுத்த நொடி அவன் கண்களுக்கு எதேச்சையாக ராகவன் விழுந்து தொலைத்தான். அவ்வளவுதான் அவனது ரொமான்ஸ் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அரக்க பரக்க உடலை உலுக்க அவளோ பயந்தே விட்டாள், அச்சத்துடன் வண்டியை விட்டு இறங்கி அவன் முன் நின்றாள்
”என்னாச்சி மாமா” என கவலையாக கேட்க அவனோ
”உன் அண்ணன் வரான் பாரு நான் போறேன், இப்படி உன்னையும் என்னையும் சேர்த்து வைச்சிப் பார்த்தா திட்டுவான், நீ அப்படி போ, நான் இப்படி போறேன்” என்றான் பதட்டமாக
”பார்த்தா பார்க்கட்டுமே மாமா”
”அது தப்பு”
”மாமா அப்ப எனக்கு வண்டி” என இழுக்க அவனோ
”அதான் உன் கையில பணம் இருக்கே உன் அண்ணன் வரான், அவன்கூட போய் வாங்கிக்க நான் போறேன்” என பதட்டமாக சொல்லிவிட்டு அவசரமாக வண்டியை திருப்பிக் கொண்டு வேறு பக்கமாக பறந்தான் கதிரவன்.
அவனது போக்கைக்கண்டு சோகமாக நின்றிருந்த மதுமதியை பார்த்தபடியே வந்து சேர்ந்தான் ராகவன்
”மதும்மா என்னாச்சிம்மா கடை வாசல்ல நிக்கற”
”போங்கண்ணா உங்களுக்கு வேற வேலையே இல்லையா இப்பதான் இங்க வரனுமா” என அலுத்துக் கொள்ள
”ஏன்மா என்னாச்சி”
”ப்ச் உங்களை பார்த்துட்டு கதிர் மாமா ஓடிட்டாரு பாருங்க”
”அவன் ஏன் ஓடனும் என்ன கேடு அவனுக்கு” என திட்ட
”தெரியலை அண்ணா”
”இப்படி சொன்னா எப்படி ஆமா அவன் உன்னை நல்லபடியாதானே கூட்டிட்டு வந்தான்