Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Ennuyire neethano
Pin It

Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 17 - Chillzee Story

This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.

ருளும் அல்லாமல் வெளிச்சமும் இல்லாமல் மங்கிய ஒளியுடன் அந்த இடம் இருந்தது. அங்கேயும் மேனகாவை அடையாளம் காண்பதற்கு சிவக்குமாருக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.

மேனகா வர மாட்டாள்!

வைபவ் சொன்னது எல்லாமே பொய்!

மேனகா சிவாவை தான் விரும்புகிறாள்!

என்று அடுக்கடுக்காக அவன் கட்டி வைத்த நம்பிக்கை எனும் காகிதக் கோட்டைகள் அடித்தளம் இல்லாமல் மெல்ல சாயத் தொடங்கியது.

அப்போதும், அவன் இருந்த மேஜையில் இருந்தே, மீண்டும் ஒருத் தடவை மேனகாவும் வைபவும் அமர்ந்திருந்த மேஜை பக்கம் விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தான். அந்த மேஜையின் எதிர், எதிர் இருக்கைகளில் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

சர்வர் அவர்கள் ஆர்டர் செய்த உணவுகளை வைத்து விட்டு சென்றான்!

வைபவ், மேனகா இரண்டுப் பேருமே அந்த வண்ணமயமான உணவுகளைத் தொடவில்லை. மாறாக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதும், தலையை தழைத்துக் கொள்வதுமாக இருந்தார்கள்! மேனகா மறுப்பாக தலையை அசைத்து பேசுவது தெளிவாக தெரிந்தது!

சிவகுமாருக்கு கோபம் வரவில்லை, மாறாக வருத்தத்தில் தொண்டையை அடைத்தது.

அவன் மேனகா மேலே அதிக அன்பு வைத்திருந்தான். அவள் மனதில் வேறு ஒருத்தன் இருப்பதை நம்புவது கடினமாக இருந்தது. ஆனால் இருக்கிறான், அது தான் உண்மை.

இதனால் தான் மேனகா அவனிடம் அதிகம் பேசாமல் தவிர்த்திருக்கிறாள்.

அப்சரா, ராமசாமிக்கு வைபவ் பற்றி என்ன தெரியும்? எவ்வளவு தெரியும்? சிவாக்கு பதில் தெரியவில்லை. ஆனால், அந்த வருத்தத்தின் நடுவிலும் மேனகா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பினான்.

மீண்டும் ஒருத் தடவை மேனகாவைப் பார்த்தான். அவள் தட்டில் இருந்த உணவை உண்ணாமல் ஸ்பூனால் கலக்கிக் கொண்டிருந்தாள்.

மேனகா எப்போது வேண்டுமென்றாலும் கிளம்ப வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால், அவள் சிவாவை கடந்து தான் செல்ல வேண்டும். சிவாவிற்கு அவளை இந்த இடத்தில நேருக்கு நேர் சந்திக்க விருப்பம் இருக்கவில்லை! அவன் மனம் வருத்தப் படும் என்பதை விட, மேனகா அந்த சந்திப்பால் எவ்வளவு பாதிப்புக்குள்ளாவாள் என்பதை அவனால் உணர முடிந்தது. அதற்கு மேல் சிவாக்கு அங்கிருக்க விருப்பம் இருக்கவில்லை. பெயருக்கு ஆர்டர் செய்திருந்த உணவிற்காக 500 ரூபாய் தாள் ஒன்றை எடுத்து வைத்து விட்டு வெளியே வந்தான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Azhagin motham neeyaaAzhagin motham neeyaa
  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Theriyuma ungalukkuTheriyuma ungalukku
  • Oru kili uruguthuOru kili uruguthu
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Mathiyoor mysteries - 01 - Unnai kan thedutheMathiyoor mysteries - 01 - Unnai kan theduthe
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Yaar kutravaliYaar kutravali

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 17 - Chillzee StoryAdharvJo 2021-05-08 22:32
Abhi nalla attack seithanga...vaibav purinjikitta nalladhu :yes: Siva, therurumathiri theriyala :no: good going ma'am 👏👏👏👏👏👏👏 indha glopal innum en ena lilaigal execute pana irukano 😈😈 look forward to read the next update.
Thank you
Reply | Reply with quote | Quote
# Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 17 - Chillzee StoryVinoudayan 2021-05-05 10:06
Nice epi👍 vaibahav andha girl sonnathu think pannalam idiot friend solrathu kekama :angry: eagerly waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 17 - Chillzee Storyதமிழ்ஸ்ரீ 2021-05-04 21:34
Nice update😇😇😇 waiting for your next episode chillzee team :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 17 - Chillzee Storysrivi 2021-05-04 13:06
abinaya super ma nee ..
Aana yen siva ippide neenga irukeenga
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 17 - Chillzee Storymadhumathi9 2021-05-04 06:24
wow abinaya pesiyathu arumaiyaana varigal & epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :clap: :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top