(Reading time: 6 - 12 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

“புரியலையே சார்”

“எப்பவும் ஈவினிங் அவளைக் காலேஜிலிருந்து பிக்கப் பண்ண கார் அனுப்புவோம்!...அன்னிக்குன்னு பார்த்து ரெண்டு டிரைவர்கள் லீவு போட்டுட்டதால்..அவளை பிக்கப் பண்ண கார் போகலை!...அவ என்னைக் கூப்பிட்டுச் சொல்லியிருந்தா நான் போய் அவளைக் கூட்டிட்டு வந்திருப்பேன்!... என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்!னு அவளே முடிவு பண்ணிக்கிட்டு...கால் டாக்ஸில வந்திருக்கா....” அந்தக் கால் டாக்ஸிக்காரன் போதையில் இருந்திருக்கான்...அதை அவள் வண்டி கிளம்பிய பிறகுதான் கவனிச்சிருக்கா...உடனே காரை நிறுத்தச் சொல்லி சத்தம் போட்டிருக்கா...ஆனா அவன் காரை நிறுத்தலை!...அதே மாதிரி என் மகள் சொன்ன வழியில் செல்லாமல் வேற ரூட்டுல காரைத் திருப்பியிருக்கான்...என் மகளுக்குத் தான் கடத்தப்படறோம்!னு புரிஞ்சிட்டுது!...கத்த ஆரம்பிச்சிருக்கா...அவன் புற நகர் சாலையில் சென்றதால் சாலையில் யாருமே இல்லை!...கடைசியில் ஒரு காட்டுக்குள் கொண்டு போய் நிறுத்தி அவகிட்ட வேற மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கான்!...இவ கத்திக் களேபரம் பண்ணப் போக...ஒரு பெரிய கல்லை எடுத்து அவளோட நெத்தில அடிச்சு மயக்கமாக்கி...அவளை...அவளை...” மேற் கொண்டு சொல்ல முடியாமல் தழுதழுத்தார்.

“நீங்க சொல்ல வேண்டாம் சார்!..எனக்கு புரிஞ்சிடுச்சு!” என்றார் சுதாகர்ஜி.

“அவ மயக்கமாயிருந்த நேரத்துல தன்னோட நண்பர்கள் மூணு பேரை வரச் சொல்லி அவங்களுக்கு அவளை இரையாக்கியிருக்கான்!...ஒரு கட்டத்துல மயக்கம் தெளிஞ்சிட்ட என் மகள் தனக்கு நடந்து கொண்டிருக்கும் விபரீதத்தைப் புரிந்து கொண்டு எழுந்து ஓட முயற்சி பண்ணியிருக்கா...உடல் ஒத்துழைக்காததினால் அரை நினைவோட அந்தக் கொடுமையை அனுபவித்திருக்கிறாள்!...”

இதுவரையில் அமைதியாயிருந்த அந்தப் பெண்மணி பேச ஆரம்பித்தாள். “அதுக்கப்புறம் நாங்க அவளைக் கண்டு பிடிச்சு மீட்டுக் கொண்டு வந்து பார்த்தா...புத்தி பேதலிச்சுப் போயிருந்தா...”

“இந்த உப்பாயம்மன் கோயில் பற்றியும்...இந்த அம்மனோட சக்தி பற்றியும் டி.வி.யிலும்...பேப்பர்களிலும் பார்த்தோம்!...எங்க மகளை இங்க கூட்டிட்டு வந்து இந்த அம்மனைக் கும்பிட வெச்சா...அவ மனநிலை சரியாகுமோ?” என்கிற நம்பிக்கையில் இங்க வந்திருக்கோம்” என்றார் அந்த சஞ்சீவ் குமாரசாமி.

“திக்”கென்றானது சுதாகர்ஜிக்கு.  “ஆஹா...நாம இதுவரைக்கும் செஞ்சு காட்டிய அற்புதங்களெல்லாம் வெறும் டிராமாவாச்சே?...அதை நம்பிட்டு இந்த மனிதர் பெரிய பிரச்சினையோட வந்திருக்காரே?...இப்ப என்ன பண்றது?...நான் பாட்டுக்கு “சரி”ன்னு சொல்லி

5 comments

  • [quote name=&quot;Mrs fayaz&quot;]அடக்கடவுளே இப்படியும் பெண்களை, misயூஸ் பண்றவங்க இருக்கிறான் களே.. இவன்வலுக்கு தான் corona, எய்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒண்ணா வரணும்..[/quote]<br />Epitila ennaku natakathan seithu facepalm 😞😞😞😞😞pethulam epa mara pokuthoo :yes: 🙁🙁🙁🙁🙁🙁anyway nice update
  • Story oda flow eppadi eppadi twist and turn edukudhu pole :Q: sad one, Sir...indha mathiri avangalai ellam 3:) 3:) <br />sundar ji eppadi handle panuvaru without ravi???<br /><br />Thank you.
  • அடக்கடவுளே இப்படியும் பெண்களை, misயூஸ் பண்றவங்க இருக்கிறான் களே.. இவன்வலுக்கு தான் corona, எய்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒண்ணா வரணும்..

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.