(Reading time: 4 - 8 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

 என்ன செய்வதென்றே புரியாத நிலையில், “அப்பா...எனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கலை” என்றாள் ஒரே வார்த்தையில்.

அந்த திருமணத்தை தவிர்ப்பதற்காகவே அவள் அப்படிச் சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட கஸ்தூரி அய்யா, நிதானமாய் அந்த அறைக்குள்ளிருந்து வெளியே வந்து கூடத்து நாற்காலியில் அமர்ந்தார். “வந்து..பொண்ணு...யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்!ங்கறா” என்றார் சும்மாவாகிலும்.

“தட்ஸ் குட்!...பொதுவாகவே எந்த முடிவையும் கொஞ்சம் நிறுத்தி நிதானமாய் யோசித்துதான் எடுக்கணும்!...அதிலும் இது வாழ்க்கை சம்மந்தபட்ட முடிவு...அவங்க எவ்வளவு வேணா டைம் எடுத்துக்கட்டும்!... ஐ வில் வெய்ட்” என்று சொல்லியவாறே அந்த மாப்பிள்ளை எழ,

“அய்யய்ய...என்ன நீங்க?...ஒண்ணுமே சாப்பிடாம எந்திரிச்சிட்டீங்க!...” கஸ்தூரி அய்யா பதற,

“உங்க பொண்ணு சம்மதம் தெரிவிக்கட்டும்,...காஃபி என்ன?..கறிக் குழம்பு விருந்தே சாப்பிடறேன்” சொல்லி விட்டு வேக வேகமாய் வெளியேறினார்.

மாப்பிள்ளையின் வாகன சத்தம் அங்கிருந்து மறைந்த்தும் கூடத்திற்கு வந்தாள் வத்சலா.  அழுததில் அவள் கண்கள் சிவந்திருந்தன.

“என்னங்க மேடம்...திடீர்னு இப்படி சொதப்பிட்டீங்க?...நேத்திக்கு உங்க கிட்ட பேசினப்ப... “இந்த விஷயத்தில் நான் எது செய்தாலும் சம்மதம்”ன்னு சொன்னீங்க தானே?” ரவீந்தர் அவளை நேருக்கு நேர் பார்த்துக் கேட்க,

“பொம்பள மனசு...ஆம்பள மனசு மாதிரி இல்லை சார்!...ஏற்கனவே உள்ளே இருக்கற ஒருத்தரை “படக்”குன்னு தூக்கி வீசிட்டு இன்னொருத்தரைக் கொண்டு வந்து ஃபிக்ஸ் பண்ணிக்க?...கொஞ்சம் டைம் எடுக்கும் சார்!...அதனால எனக்கும் கொஞ்சம் டைம் குடுங்க சார்...மனசை பக்குவப்படுத்திக்கிட்டு சொல்றேன்” என்றாள் விட்டேத்தியாக,

அவள் ம்னதிலிருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத ரவீந்தர், “ஓ.கே..மேடம்...டேக் யுவர் ஓன் டைம்” சொல்லி விட்டு வெளியேறினான்.

தொடரும்...

Next episode will be published on 18th June. This series is updated weekly on Fridays.

Go to Kaanpome ennaalum thirunaal story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.