Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 12 - 24 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pon maalai mayakkam
Pin It

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத் 

பிறைநிலா கையிலிருந்த பேப்பரை இமைக்காமல் சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையும் அறியாமல் பெருமூச்சு ஒன்று வெளியானது.

விஜயன் இதை பார்த்திருந்தால் என்ன சொல்லி இருப்பான்?? கோபப் பட்டிருப்பான்??!!

எத்தனை முயன்றாலும் அவளால் விஜயனை பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

அவர்கள் இருவரும் நேரடியாக சந்தித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகி விட்டது... நினைக்கும் போதே அவளின் இதயத்தில் வலி ஏற்பட்டது...

பிரிவு அவர்களுக்கு புதிதில்லை... எட்டு வருடங்களுக்கு முன் விஜயன் எதிர்பாராமல் அவளை முத்தமிட்டப் போதும் பிரிவு வரத் தான் செய்தது... ஆனால், அப்போது அவளுக்கு வேறு சில காரணங்கள் இருந்தது... செய்து முடிக்க வேண்டிய சில விஷயங்கள் இருந்தன...

ஆனால், இப்போது...

விஜயனிடம் ஓடிச் சென்று, மன்னிப்புக் கேட்டு சமாதானம் செய்ய விரும்பிய மனதை கஷ்டப்பட்டு அடக்கி வைத்தாள்.

விஜயன் விரும்பியோ, விரும்பாமலோ ஒரு முடிவு எடுத்து விட்டான்... அதை அவளும் ஏற்றுக் கொள்வது தான் முறை! இதற்கு மேலே சென்று அவனையும், அவன் குடும்பத்தையும் தொந்தரவு செய்வது சரி இல்லை...

மனதை திசை திருப்ப ஆன்லைன் செய்திகள், சமூக வலைத்தளங்களை பார்க்க விழைந்தாள்... பல நாட்களாகவே அவள் அவற்றை பார்க்கவில்லை...

அவர்கள் இருவரின் திருமணம் நின்றுப் போன செய்தி வந்த நாள் முதல் VjsGreatEscape, PNtheHeartBreaker போன்ற ஹாஷ்டேகுகள் வலம் வரத் தொடங்கின... விஜயனின் நாட்டில் அந்த செய்தி முதலில் வெளியானதால், பெரும்பாலான மெசேஜுகள் விஜயன் அவனுடைய ‘ஸ்டேட்டஸுக்கு’ சரி நிகரில் இல்லாத திருமணத்தில் இருந்து தப்பி விட்டான் என்றுத் தொடங்கி, பிறைநிலாவை கேலி, கிண்டல் செய்யும் மீம்ஸ் ஆக தொடர்ந்தன... திருமணம் நின்ற செய்தி இங்கே விஜயத்தீவை எட்டிய உடன், WeStandByOurPrincess என்ற டாகுடன் மெசேஜுகள் குவியத் தொடங்கியது...

இரண்டு அரசக் குடும்பமும் வேறு எந்த விதமான ஆதாரபூர்வமான செய்தியை வெளியிடாததால், அந்த மெசேஜுகளும் டேகுகளும் தொடர்ந்துக் கொண்டே தான் இருந்தன...

அது மட்டுமல்லாமல் விஜயன் - பிறைநிலா காதல் பற்றி வந்த திடீர் செய்தி தான் இந்த திருமணம் நின்றுப் போனதற்கு காரணம் என்று பல ரகமான conspiracy செய்திகளும் பத்திரிக்கைகளில் வெளியாகின...

இப்போது மூன்று மாதத்திற்கு பின் பார்க்கும் போதும் அந்த பழைய மூன்று ஹேஷ்டேகுகளும்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்Saratha 2021-08-01 18:38
Vijayan enga
Apa nizha IPA lexsurer ah
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்AdharvJo 2021-07-27 23:26
Akka na akka than 😍😍😍 nalla sketch pottu kudukuranga...but sheela aunty oda reaction ethir paradhudhu...she didn't trust akila steam nice update ma'am 👏👏👏👏👏 but indha vijay ena panuraru....avaru too much...vandhu samadhanam panamal enga poitaru :Q: indha rendu pairs oda reunion kaga waiting....
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்madhumathi9 2021-07-27 21:06
:hatsoff: to pirainila :clap: nice & cute epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்தமிழ்ஸ்ரீ 2021-07-27 13:09
Nice update☺☺☺ waiting for your next episode☺☺☺
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்rspreethi 2021-07-27 10:11
Super update... Pirainila always awesome ❤ waiting for anandh and akila epi.
Reply | Reply with quote | Quote
# PonmalaimsyakkamSrichitra 2021-07-27 08:54
Very interesting epi sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்Arunaa 2021-07-27 08:23
Pirainila and vijayan is the leading pair. As usual akila s next mission is to settle down their marriage ?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்Sabariraj 2021-07-27 07:17
எப்படி பார்த்தாலும் பிறைநிலாதான் இந்த கதையின் ஹீரோயின்
Reply | Reply with quote | Quote

CRC 2021 Reviews

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

PMM

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

KTKOP

PVOVN2

KanKad

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top