(Reading time: 5 - 9 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 04 - நவ்யா

“ஹாய் ஜனனியா?”

   

உமேஷ் கையிலிருந்த கார்டை பார்த்துக் கொண்டே போனில் வினவினான்.

   

“நீங்க யாரு?” என்றுக் கேட்ட பெண் குரலில் துளியும் ஆர்வம் தெரியவில்லை.

   

“ஜனனி, என் பேர் உமேஷ். நேத்து என் கையில உங்க விசிட்டிங் கார்ட் வச்சுட்டுப் போனீங்க,”

   

“கன்சல்ட்டிங்கா? சாரி, என் வொர்க்கிங் ஹவர்ஸ் முடிஞ்சிருச்சு.”

   

“கன்சல்டிங்குக்காக நான் கூப்பிடலை. உங்க கிட்ட ஜெனரலா பேசனும்.”

   

“எதைப் பத்தி பேசனும்?“

   

“உங்க ஆர்டிக்கில்ஸ் படிச்சேன். எதுலேயும் லாஜிக்கே இல்லை. எதுக்கு இப்படி ஊரை ஏமாத்துறீங்கன்னு கேட்கனும்.”

   

“என்ன கொழுப்பா? போன்ல ஒளிஞ்சுட்டுப் பேசினா நான் பயந்திருவேன்னு நினைப்பா. போலீஸ் வச்சு ட்ராக் செய்து உள்ளே தள்ளிடுவேன்.”

   

“நீங்க அதெல்லாம் செய்ய வேண்டாம். உங்க வீட்டு கதவை திறந்தாலே போதும்.”

   

“என்னது?”

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.