தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 24 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
லேப்டாப்பில் மும்முரமாக வேலையில் ஈடுப்பட்டிருந்த உதய் அவனின் செல்ஃபோன் சிணுங்கிய ஓசையில் கவனம் கலைந்து அதை எடுத்து பார்த்தான்.
டிஸ்ப்ளேவில் துளசி என்ற பெயரை பார்த்தவன், உடனேயே அழைப்பை ஏற்றான்.
“என்ன அண்ணி இந்த டைம்ல???”
“என்ன விஷயம் உதய்??? நந்து இன்னைக்கு கொஞ்சம் டல்லா இருக்கா?”
“டல்லாவா???”
“ஆமாம் ரொம்ப அமைதியா இருக்கா...”
“அதானே பார்த்தேன்! டல்லா இருக்கிறது வேற, அமைதியா இருக்கிறது வேற! சரி உங்க க்ளோஸ் ஃப்ரென்ட் தானே, என்ன விஷயம்னு நேரா நீங்களே கேட்க வேண்டியது தானே?”
“கேட்காமல் என்ன, ஒன்னுமில்லைன்னு சொல்றா...”
“குட் குட்!”
“என்ன குட்?”
“இங்கே பாருங்க அண்ணி என்ன தான் நீங்க இரண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரென்ட்ஸா இருந்தாலும் என்னோட விஷயத்தை எல்லாம் நதி உங்க கிட்ட ஷேர் செய்தால் நல்லாவா இருக்கும்? எங்களுக்கு கொஞ்சம் ப்ரைவசி வேண்டாம்?”
“ஹலோ!”
“ஹி ஹி ஹி.... அண்ணி!!!! டென்ஷன் ஆகாதீங்க... நான் எவ்வளவு கஷ்டப்பட்டு மேடமை யோசிக்க வச்சிருக்கேன்... நீங்க நடுவில வந்து குழப்பினால் எப்படி?”