(Reading time: 5 - 10 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

இல்லை.”

   

“யாரை உங்களை????”

   

அவள் கேலியாய், காதலாய் கலந்து சொன்ன விதத்தில் மயங்கியவனாய், அவளை இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான் சரத்.

   

மறுக்காமல் அவனின் அணைப்பில் அடங்கிய துளசிக்கு, நந்து உதய் மட்டும் இல்லை சுற்றி இருக்கும் உலகமே கூட மறந்து போனது!

   

✽✽✽

   

நந்திதாவிற்க்கு அது என்ன இடம் என்று புரியவில்லை...

   

பேய் மழை என்று சொல்வதை போல் இடி, மின்னலுடன் மழை ஜோவென்ற ஒலியுடன் கொட்டோ கொட்டோவென்று கொட்டிக் கொண்டிருந்தது....

   

அந்த இடத்தில் இருந்த மெல்லிய விளக்கின் ஒளியில் பெரும்பாலான அறை நிழலாக தான் தெரிந்தது...

   

அவள் குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்க்க, திடீரென அதுவரை நிழலாய் இருந்த உருவம் ஒன்று அசைந்து அவள் பக்கம் வந்தது...

   

முதலில் கலக்கத்துடன் பார்த்தவள், அது உதய் என்பதை தெரிந்துக் கொண்டு ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

   

இது போன்ற இடத்தில் உதய் என்ன செய்துக் கொண்டிருக்கிறான்?

   

அவன் சற்றே நடந்து முன்னே வர, இப்போது அவனின் முகம் தெளிவாக அவளுக்கு புலப்பட்டது... அவனிடம் அவ்வப்போது தோன்றும் அதே பிரத்தியேக சிறப்பு புன்முறுவலுடன் இருந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.