(Reading time: 5 - 10 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“நான் குழப்புறேனா???? எல்லாம் என் நேரம்டா! நாளைக்கு உங்க அம்மா கிட்ட உன்னை போட்டு கொடுக்குறேன் இரு...”

   

“நோ ப்ராப்ளம்ஸ்.... செய்ங்க....”

   

“அவ்வளவு தைரியம் வந்தாச்சா? சரி நந்து கிட்ட சொல்றேன்....”

   

“அதை செய்ங்க... நான் இப்படி முகத்தை சுத்தி மூக்கை தொட வேண்டி இருக்காதே! நேராவே விஷயத்துக்கு போயிடலாம்....”

   

“இவ்வளவு பேசுறீயே, நீயே நேரா சொல்லிட வேண்டியது தானே?”

   

“நானும் அப்படி தான் நினைக்கிறேன்... ஆனால் முடிய மாட்டேங்குதே.... அந்த கண்ணு இரண்டும் என்னை யோசிக்க விட்டால் தானே???? கல்யாணம் ஆனப்புறம் என் முன்னாடி அவளை உட்கார வச்சு அப்படியே பார்த்து ரசிச்சுக்கிட்டே இருப்பேன்.....”

   

“முடியலை உதய்! இந்த டையலாக் எல்லாம் நந்து கிட்ட சொல்லு...”

   

“சொல்ல தான் போறேன்... சீக்கிரமே சொல்லும் டைம் வர தான் போகுது....”

   

“ஆனாலும் நீ ரொம்ப ஆப்டிமிஸ்ட் உதய்!”

   

“இல்லை அண்ணி. உண்மையை தான் சொல்றேன்... இப்போ எல்லாம் நான் மட்டும் உங்க ஃப்ரென்டை சைட் அடிக்குறது இல்லை...”

   

“அப்புறம்???”

   

“அவங்களும் தான் என்னை சூப்பரா சைட் அடிக்குறாங்க!”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.