Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 02 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தன்னுடைய க்யூபிற்கு வந்து கம்யூட்டரை ஆன் செய்தாள் தேன்மொழி... ஆனால் மனம் இப்போதும் சத்யாவின் பின்னேயே இருந்தது...
அவனின் நினைவு வருவது அவளுக்கு புதிதில்லை. ஏன் இன்றுக் காலையில் மஞ்சரி ‘கல்யாணம்’ என்று சொன்ன உடனேயே அவனின் முகம் தான் அவளின் நினைவில் வந்துப் போனது...
கடந்த மூன்று வருடங்களில், பலமுறை அவனிடம் ஒரு சாரி’யாவது சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறாள். ஆனால் அவனை சந்திக்கும் வாய்ப்பு தான் இதுவரை கிடைக்கவே இல்லை...
இங்கே எதற்கு வந்திருக்கிறான்???
இப்போதாவது அவனிடம் சாரி சொல்ல முடியுமா???
சத்யாவுடன் பார்த்த பெண்ணின் ஞாபகம் வந்தது... அவனுக்கு திருமணம் ஆகி இருந்தால் இதற்கு மேல் அவள் சாரி சொல்வது தேவை தானா???
தேன்மொழி தன் யோசனையில் ஆழ்ந்துப் போயிருக்க, அவளின் தோழி கண்மணி அங்கே வந்தாள்.
வழக்கத்திற்கு வினோதமாக கம்ப்யூட்டர் திரையில் ஸ்க்ரீன் சேவர் ஓடிக் கொண்டிருக்க, அதை வெறித்து பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த தேன்மொழியைப் பார்த்து ஆச்சர்யப் பட்டாள் கண்மணி.
"ஹாய் தேன், என்ன இது அதிசயம்? டப் டப் டப்புன்னு கீபோர்ட்டை போட்டு அடிச்சு உடைச்சுட்டு இருப்ப??? இன்னைக்கு ஒரே அமைதி மயமா இருக்கு???"
கண்மணியின் குரலில் சிந்தனையில் இருந்து வெளிப்பட்ட தேன்மொழி, அவளுக்கே உரிய புன்னகையோடு,