(Reading time: 6 - 12 minutes)
Engeyo partha mayakkam
Engeyo partha mayakkam

   

"குட் மார்னிங் கண்மணி... ஒன்னுமில்லைப்பா ஏதோ யோசிச்சிட்டு இருந்தேன்," என்றாள்.

   

"அது சரி!!!! தேன்மொழிக்கு ஆஃபிஸ் வந்தப்புறம் வேற விஷயம் எல்லாம் யோசிக்க கூட நேரமிருக்கா???!!!! உலக அதிசயம் தான்...!!!! சரி, அது போகட்டும் இன்னைக்கு எங்க வீட்டு குட்டி வாலு ரிஷப் என்ன செய்தான் தெரியுமா?"

   

கண்மணியின் முதல் வரியில் சிணுங்கிய மனதை கட்டுப்படுத்தி, கண்மணியின் மகன் செய்த குறும்பை கேட்க ஆரம்பித்தாள் தேன்மொழி.

   

✽✽✽

    

குளிர் சாதனப் பெட்டி பொறுத்தப் பட்ட அந்த குளுகுளு அறையில் அமர்ந்து, அங்கே இருந்த பெரிய திரையில் தெரிந்த கம்பெனி லாப நஷ்ட, கணக்குகளை அசுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா. 

   

தேன்மொழியைப் மீண்டும் பார்த்த திகைப்பில் இருந்து அவனின் மனம் இன்னமும் மீண்டு வரவில்லை. 

   

அவள் அப்படியே தான் இருந்தாள்!!! மூன்று ஆண்டுகளில் அவளிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை!!!

   

எப்போதும் போலவே, அவளின் நினைவு வந்த உடனே,

   

கனவுகளில் வாழ்ந்த நாளை கண்ணெதிரே பார்க்கிறேன்...
கதைகளிலே கேட்ட பெண்ணா திரும்பி திரும்பிப் பார்க்கிறேன்...

   

என்ற பாடல் வரிகள் மெல்லிசையுடன் அவனுக்காக ஸ்பெஷலாக காதில் ஒலித்தது.

   

“டேய் சத்யா... எந்த உலகத்துல டா இருக்க??? அவங்க ப்ரொடக்ஷன் பத்தி சொல்றாங்க பாரு... 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.