கவனமா படி...”
அவனின் முழங்கையில் மெல்ல இடித்து சத்தமில்லாமல் பேசிய சங்கீதா, மீண்டும் அவனை அவனுடைய கனவுலகில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தாள்...
கஷ்டப்பட்டு மனதை திசை திருப்பி அங்கே ஓடிக் கொண்டிருந்த பவர் பாயிண்ட் பிரசென்ட்டேஷனை கவனிக்கத் தொடங்கினான் சத்யா.
ஆனாலும் அது அவனுக்கு அத்தனை சுலபமாக இல்லை... அவனின் மனம் மீண்டும் மீண்டும் மீண்டும் தேன்மொழியிடமே சென்றது...
அவளுக்கு அவன் யார் என்று தெரிந்து இருக்குமா??? இன்று அவள் அவளைப் பார்த்த பார்வையின் பொருள் என்ன???
அலைபாயும் மனதுடன் அவன் இருக்க... ஒரு வழியாக அந்த பவர் பாயிண்ட் பிரசென்ட்டேஷன் முடிவுக்கு வந்தது...
அரை மணி நேர இடைவெளிக்கு பின் ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்குவது என்று முடிவு செய்தார்கள்.
மற்றவர்கள் எப்படியோ, சத்யாவிற்கு அந்த ப்ரேக் கட்டாயம் தேவைப் பட்டது!
மரியாதை நிமித்தம் காஃபி அருந்தியப் படி மற்றவர்களுடன் ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசினான். பின், அந்த அறையை மூடி இருந்த திரையை சற்றே விலக்கி வெளியே தெரிந்த மரங்களின் அழகை ரசிப்பவனைப் போல பாவனை செய்து, அது வரை மனசுக்குள் அடக்கி வைத்திருந்த எண்ணங்களை கட்டவிழ்த்து விட்டான்.
✽✽✽
தேன்மொழியை அவன் முதல் முதல் சந்தித்தது ஒரு திருமணத்தில்...