(Reading time: 6 - 12 minutes)
Engeyo partha mayakkam
Engeyo partha mayakkam

அவனின் அம்மா ஈஸ்வரியுடன் உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பிற்காக சென்றிருந்தான்...

   

கல்யாண மண்டபத்தின் பார்க்கிங்கில் பயங்கர கூட்ட நெரிசலாக இருந்தது. எனவே அம்மாவை மண்டபத்தின் வாசலில் இறக்கி விட்டவன், பொறுமையாக காரை பார்க் செய்து விட்டு வந்தான்.

   

கல்யாண மண்டபத்தின் வாசலின் பக்கத்தில் அவன் வந்தப் போது, எதிரே ஓடி வந்த சிறுப் பெண் ஒருத்தி அவன் மீது மோதிக் கொண்டாள்...

   

அவள் விழுந்து விடாததுப் போல அவளை தாங்கி பிடித்தான் சத்யா.

   

ஏன் இப்படி கண் மண் தெரியாமல் ஓடி வருகிறாய் என்று அவன் சிறுமியிடம் கேட்க நினைத்த நேரம்... பக்கத்தில் வெள்ளிக் காசை உருட்டியதுப் போல இனிமையான சிரிப்பு சத்தம் கேட்டது...

   

நிமிர்ந்துப் பார்த்தவன், அசந்துப் போனான்...

   

பச்சை நிற சேலைக் கட்டி பச்சைக் கிளியாக, ஒயிலாக வந்தாள் அவள்...

   

அவளுக்கு பேக்ரவுன்ட் எஃபக்ட் கொடுப்பது போல மண்டபத்தில் இருந்து ஃப்ளாஷ் லைட் வெளிச்சம் வேறு வர... மூச்சு விடவும் மறந்துப் போய் அவளைப் பார்த்தப் படி நின்றான் சத்யா...

   

“ஹேய் மாட்டிக்கிட்டீயா???” என்றுக் கேட்டப் படி அவனை நோக்கி அவள் வந்தாள்...

   

“தேன்மொழி அக்கா... இதெல்லாம் ஏமாத்து வேலை... ஒத்துக்க முடியாது...” சொல்லிய படி சத்யாவுடைய கைப்பிடியில் இருந்த சிறுமி, திமிறி விடுப்பட்டு ஓடினாள்...

   

சிறுமி அப்படி தள்ளி விடுவாள் என்று எதிர்பார்த்திராத சத்யா தள்ளாடி நகர்ந்தான்... சிறுமியை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.