நந்திதாவின் இதழ்களிலும் தானாக புன்சிரிப்பு தோன்றியது!
எப்போதும் அலுவலகத்தில் பார்ப்பது போன்ற ஃபார்மல் உடையில் இருந்தான் உதய்...
வெளீர் நீலத்தில் கோடுகள் போட்ட ஷர்ட் அவனுக்கு அம்சமாக பொருந்தி இருந்தது...
“என்ன நந்திதா நான் சொன்ன பொண்ணு யாருன்னு தெரிஞ்சிருச்சா?”
உதயின் குரலில் ஒருவித கொஞ்சல்....
நந்திதா அசையாமல் சிலையாக நிற்க, அவன் அவளருகே நடந்து வந்தான்.
அவர்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளி குறைந்துக் கொண்டே வந்தது...
இன்னும் சில அடிகள் எடுத்தால் அவளருகிலேயே வந்து விடுவான்....
நந்திதா மந்திரத்தில் கட்டுண்டவள் போல் நின்றிருந்தாள்...
சட்டென கண்ணை பறிக்கும் மின்னல் மின்னியது... நந்திதா கண்களை மூடிக் கொண்டாள்....
உதய் அவளருகில் இருப்பதை உணர்த்துவது போல அவனின் காலடி ஓசை வெகு அருகே கேட்டது...
காதை பிளக்கும் இடி இடித்தது....
நந்திதா திகைத்து கண்களை திறந்தாள்.
அறையில் ஏ.சியின் மெல்லிய சத்தமும், மெல்லியதாக பரவி இருந்த இரவு விளக்கின் ஒளியும் அவளின் புலனுக்கு எட்டியது...