சரியான நேரத்தில் விஸ்வநாதன் செய்த உதவி புரிந்து ஜனனி மரியாதையுடன் அவரைப் பார்த்து புன்னகை புரிந்தாள்.
விஸ்வநாதன் கண்களை மூடி திறந்து அவளின் செய்கையை ஏற்றுக் கொண்டார். பிறகு மகளிடம், “காருண்யா, என்ன வீட்டுக்கு வந்த கெஸ்ட் இரண்டுப் பேரையும் நிக்க வச்சே பேசிட்டு இருக்க? நீ தானே அவங்களை உபசரிக்கனும்?” என்றார்.
“அவங்க வரவேற்பில் ஒரு குறையும் இல்லை சார். நாங்க பரஸ்பரம் ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப் படுத்திட்டு இருந்தோம்,” என காருண்யாவை தாங்கி பேசினாள் ஜனனி.
காருண்யா மலர்ந்த முகத்துடன் ஜனனியை நன்றிப் பொங்க பார்ப்பதை கவனித்த விஸ்வநாதனின் மனம் குளிர்ந்தது.
“அப்போ சரி!” என்றவர், தொடர்ந்து மகளிடம், “காருண்யா, நீயும் தர்மாவும் உமேஷுக்கு வீடை சுத்திக் காட்டுங்களேன்,” என்றார்.
“எனக்கு மட்டும் எதுக்கு சார்? ஜனனியும் வரட்டும்,” என்றான் உமேஷ்.
“நானும் ஜனனியும் எங்க டீல் பத்தி பேசி முடிக்க வேண்டி இருக்குப்பா. நீ அவங்களோட போ, நாங்க பேசிட்டு வந்துடுறோம்.” என்று வற்புறுத்தினார் விஸ்வநாதன்.
உமேஷ் அப்போதும் தயங்கி நின்றான். அவனின் கண்கள் ஜனனியிடம் அனுமதி கேட்டது.
“சார் சொல்றாரே உமேஷ். நீங்க போங்க. நான் சார் கிட்ட பேசிட்டு வரேன்,” என்று ஜனனியும் சொன்னாள்.
அதற்கு மேல் உமேஷ் தயங்கவில்லை.
“ஜனனி, நீங்க சொன்னதுப் போல இவர் உண்மையாவே அருமையான மனிதர் தான். உங்க மேல எவ்வளவு அன்பு இருந்தா சில நிமிஷம் பிரிய கூட இவ்வளவு யோசிக்குறார்?” என்று