(Reading time: 19 - 37 minutes)

05. என் இனியவளே - பாலா 

En Iniyavale

னியா இளவரசனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன இனியா என்ன ஆயிற்று ஏன் இவ்வாறு விழிக்கிறாய்” என்று வினவினான் இளவரசன்.

இனியா தூக்கி வாரி போட்டு தன்னிலைக்கு வந்தாள். “இல்லை ஒன்றும் இல்லை” என அவசரமாக பதில் கூறினாள். 

“அப்படியா” என இளவரசன் அவனின் வெற்றி புன்னகையை வெளியிட்டான்.

“இல்லை நீங்கள் இங்கு எப்படி திடீர் என்று வந்தீர்கள்?”

“நான் கார்த்திக்கை பார்க்க வந்தேன்” என்றான்.

“ஓ” என்ற இனியா “நீங்களும் அவனும் விரைவில் நண்பர்களாகி விட்டீர்கள் போலும் என்று ஒரு மாதிரி குரலில் கூறினாள்.”

“ஆமாம் இனியா நான் அவனிடம் கலையிலே வருவதாக கூறியிருந்தேன் ஆனால் வர இயலவில்லை. நான் இப்போது கார்த்திக்கை தான் பார்க்க போகிறேன் நீயும் என்னுடன் வருகிறாயா?” என்றான்.

இனியாவிற்கு அவன் பேசியதின் அர்த்தத்தை விட அவன் ஒருமையில் பேசியது தான் மனதில் நின்றது. இவன் நம்மை எப்போதிலிருந்து ஒருமையில் அழைக்கிறான் என யோசித்தாள். அவன் தன்னை ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு தான் அழைக்கிறான் என்பது இனியாவிற்கு புரிந்தது

“ம் வருகிறேன்” எனக் கூறி இனியா அவனுடன் சென்றாள்.

கார்த்திக்கின் அறையை அடைந்து இளவரசன் உள்ளே சென்றதும் கார்த்திக் அவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தான்.

“வாங்க அங்கிள் உங்களுக்காக தான் வெயிட் பண்றேன். நீங்க வருவீங்களோ மாடீங்களோனு நினச்சேன். வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் என்றான்.” அதன் பின் தான் அவன் இனியாவை கவனித்தான்.

பின்பு இனியாவிடம் திரும்பி “வாங்க அக்கா நீங்களும் வந்திருகீங்களா” என்றான்.

இனியா அவனை முறைத்து விட்டு “ஓ நான் உன் கண்ணுக்கு இவ்வளவு சீக்கிரம் தெரிஞ்சிட்டேனா” என்றாள்.

அதற்குள் இடையிட்ட இளவரசன் “என்ன அங்கிள் ஆ!” என சோக ராகத்தில் கூறினான். பின்பு “ஓகே முறை சரியாக தான் வருகிறது” என்பதை மட்டும் அடங்கிய குரலில் இனியாவிற்கு மட்டும் கேட்கும்படி கூறினான்.

இனியா திகைத்தாள்.

கார்த்திக்கோ “ஏன் அங்கிள் உங்களை நான் அங்கிள் என்று கூப்பிடுவது உங்களுக்கு பிடிக்கவில்லையா எனக் கேட்டு வேண்டுமானால் நான் உங்களை அண்ணா என்று அழைக்கட்டுமா” எனக் கேட்டு முடிப்பதற்குள், இளவரசன் “வேண்டாம்” எனக் கிட்டத்தட்ட அலறினான்.

“இல்லை வேண்டாம் நான் சும்மா தான் சொன்னேன். நமக்குள் வயது வித்தியாசம் அதிகம். அதனால் நீ என்னை அங்கிள் என்று கூப்பிடுவது தான் சரியாக இருக்கும். ஆனால் நீ என்னை பெரியப்பா சித்தப்பா என்ற முறையில் அங்கிள் என்று அழைக்கவில்லையே” எனக் கேட்டான்.

“இல்லை அங்கிள் நான் உங்களை என் மாமாவாக நினைத்து தான் அங்கிள் என்று கூப்பிடுகிறேன். எங்க அப்பா அம்மா காதல் திருமணம் செய்தவர்கள். அதனால் அம்மாவின் சொந்தக்காரர்கள் யாரும் எங்களுடன் பேச மாட்டார்கள். அம்மா போட்டோவில் மாமாவை காண்பித்தார்கள். எனக்கு உங்களை பார்த்தா என் மாமா தான் நியாபகம் வறாரு. அதான் உங்களை அப்படி அழைக்கிறேன்.”

“ஓகே. அப்படியானால் நீ என்னை மாமா என்று தமிழிலேயே அழைக்கலாம். எனக்கும் அது தான் இஷ்டம்.”

“நிஜமாகவா அங்கிள். அப்படி உங்களை கூப்பிட்டா எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும்” என்றான்.

“அப்ப ஏன் திரும்ப திரும்ப என்னை அங்கிள் என்று அழைக்கிறாய்.”

“ஓகே. மாமா. இப்ப ஓகே. வா.”

“ம்ம் இப்ப ஓகே.”

இவர்கள் இருவருக்கும் அங்கு இனியா இருப்பதே மறந்து விட்டது போலும். இனியாவிற்கு மிகவும் திகைப்பு. ஒரே நாளில் ஒருவனால் ஒருவரை இவ்வளவு மயக்க முடியுமா என்று.

கார்த்திக்கின் அறைக்கு இனியா எப்போது வந்தாலும் இனியாவை தவிர அவன் யாரிடமும் பேச மாட்டான். இப்போது என்னவென்றால் இனியாவை அவன் கவனிப்பதாகவே இல்லை. அதிலும் இனியா அவனிடம் கோபமாக பேசிக்கொண்டிருந்த போதிலும் அதை மறந்து அவன் இன்னொருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறான்.

இனியா “சரி நான் கிளம்புகிறேன். நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்” என்று சொல்லி விட்டு கிளம்ப தயாரானாள்.

“ஏன்?” என இருவரும் ஒன்று போல் கேட்டார்கள்.

“நீங்கள் பேசிக் கொண்டிருக்கையில் நான் ஏன் இங்கு தேவை இல்லாமல் நின்றுக் கொண்டிருக்க வேண்டும்” என்றாள்.

அப்போது தான் இருவருக்கும் அவளின் கோபம் புரிந்தது.

“சாரி அக்கா. உங்களை நான் கவனிக்கவில்லை என்று என் மேல் கோபமா அக்கா.  நீங்கள் இருவரும் நண்பர்கள் தானே அக்கா. பின்பு ஏன் என் மேல் கோபபடுகிறீர்கள்?” எனக் கேட்டான்.

இனியாவிற்கு இப்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சமாளித்து “இல்லை அப்படி ஒன்றும் இல்லை. நான் இன்னும் சாப்பிடவில்லை. போய் தான் சாப்பிட வேண்டும். அப்புறம் ஒரு அப்பாயின்மன்ட் இருக்கிறது” எனக் கூறினாள்.

“அப்ப என் மேல கோபம் இல்லை தானே அக்கா” எனக் கார்த்திக் சோகமான முகத்துடன் கேட்டான்.

அவன் முகத்தை பார்த்து பரிதாபப்பட்ட இனியாவும் “இல்லையென” கூறினாள்.

“அப்படியென்றால் ஒரு 5 நிமிஷம் இங்க பேசிட்டு போங்கக்கா. இல்லேன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்” எனக் கெஞ்சினான்.

இனியாவும் சரி என தலை அசைத்து சில நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து கிளம்பினாள்.

னியாவுடனே இளவரசனும் கிளம்பினான். பின்பு “இனியா உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமே” என்றான்.

அவன் மறுபடியும் ஒருமையில் அழைப்பதை கண்ட இனியாவிற்கு கொஞ்சம் கோபம் தான் வந்தது.

“இப்போது முடியாதே மிஸ்டர் இளவரசன்” என்றாள்.

மிஸ்டர் எனக் கூறி யோசித்த இளவரசன், “ஏன் இனியா நான் உன்னை வா போ என்று அழைக்கிறேன் என்று கோபமோ. எப்படியும் நீ என்னை விட நான்கைந்து ஆண்டுகள் சிறியவளாக தான் இருப்பாய். அதனால் உன்னை வாங்க போங்க என்று என்னால் அழைக்க முடியவில்லை. தவறென்றால் சொல்லி விடு. நான் முயற்சி செய்து உன்னை சாரி உங்களை அவ்வாறே அழைக்கிறேன்” என்றான்.

திரும்பவும் இனியவிற்கு தான் ஒரு மாதிரி ஆகிற்று.

அவசரமாக “இல்லை இல்லை” என்றாள்.

பின்பு ஏன் நான் இப்போது உன்னுடன் பேச இயலாது என வினவினான்.

“இப்போது தானே கூறினேன். எனக்கு இப்போது ஒரு அப்பாய்ன்மன்ட் இருக்கிறது” என்று எனக் கூறினாள்.

ம்ம் என யோசித்து “உனக்கு ஆட்சேபனை இல்லையெனில் உன்னோட லஞ்ச் டைமில் நாம் பேசலாமா. நானும் இன்னும் சாப்பிடவில்லை. உங்களின் லஞ்ச்சை கொஞ்சமேனும் என்னுடன் ஷேர் செய்ய மாட்டீர்களா.”

“எனக்கு ஒன்றும் ப்ராப்ளம் இல்லை. வாங்க. என் அறைக்கு செல்வோம்.”

இருவரும் இனியாவின் அறைக்கு சென்றார்கள்.

இனியா ஒரு டிபன் பாக்ஸ் எடுத்து இளவரசனிடம் கொடுத்தாள்.

“என்ன இனியா என் கிட்ட உன் லஞ்ச் கொடுத்திட்டு நீ என்ன பண்ணுவ. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. நீங்க சாப்டுங்க. நான் ஜஸ்ட் உங்க கிட்ட பேசணும். அவ்ளோதான்”

“இல்ல நான் இன்னொரு லஞ்ச் பாக்ஸ் எடுத்திட்டு வந்திருக்கேன். நீங்க சாப்டுங்க. சப்டுட்டே என்ன சொல்லணுமோ அத சொல்லுங்க.”

“என்ன இன்னொரு லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு வந்திருக்கீங்க. யாருக்காக எடுத்துட்டு வந்தீங்க. எனக்கு தந்துட்டீங்களே பரவால்லையா.”

“இல்ல என் பிரண்டு ரேவதிக்காக எடுத்துட்டு வந்தேன். நான் டுடே சாப்ட லேட் ஆயிடுச்சி. அவ சப்டிருப்பா. நீங்க சாப்டுங்க. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.”

“ஓகே. சந்துரு இன்னும் நார்மல் ஆன மாதிரி தெரியல. அம்மா என்ன பீல் பன்றாங்கனா நீ கொஞ்சம் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து அவன் கிட்ட பேசிட்டு இருந்தா அவன் கிட்ட இன்னும் இம்ப்ரூவ் தெரியும்னு பீல் பண்றாங்க. “

(அம்மா மட்டும் தான் நினைக்கிறார்களா என்று இனியா மனதில் கேட்டுக் கொண்டாள்.)

“நீ என்ன சொல்ற இனியா” என்று இளவரசன் கேட்டான்.

இனியாவின் வேண்டாம் என்று சொல்ல தான் இனியா நினைத்தாள். ஆனால் அவளால் அப்படி சொல்ல இயலவில்லை.

“என்ன இனியா என்ன யோசிக்கிறீர்கள். இப்போதைக்கு அவனை இங்கு கூட்டிட்டு வரர்துல இருக்கற ப்ராப்ளம் பத்தி நான் ஏற்கனவே உன் கிட்ட சொல்லிட்டேன். கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க. வேற டாக்டர் ஏற்பாடு பண்ணலாம்னு கூட யோசிச்சேன். பட் அவன் உன் கிட்ட பிரண்ட்லியா பேசறான். அதான் யோசிக்கிறேன்.”

“இல்லை பரவால்ல. நான் வரேன். பட் வீட்டுல கேட்டுட்டு சொல்றேன். பொதுவா சின்ன பசங்க வீட்டுக்கு தான் பொய் கவுன்செல்லிங் தருவேன். அதனால வீட்டுல கேட்டு சொல்றேன்.”

“ஓகே. இனியா. ரொம்ப தேங்க்ஸ்.”

“இதுல தேங்க்ஸ் சொல்றதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல.”

“ம்ம். இது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமா தெரியாது. அது எவ்வளவு பெரிய விசயம்னு எங்களுக்கு தான் தெரியும்.“

“சரி அத பத்தி விடுங்க. சாப்பாடு எப்படி இருக்கு.”

“ஓ ரொம்ப சூப்பர். வெஜிடபில் பிரைட் ரைஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். இது ரொம்ப நல்லா இருக்கு. நீங்க தான் செஞ்சீங்களா. இத சாப்பிடவே உங்க வீட்டுக்கு ஒரு முறை வரணும் என்று பேசிக்கொண்டே சென்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.