(Reading time: 19 - 37 minutes)

தற்குள் அங்கு வந்து டாக்டர் ரவி அவளை பார்க்க பேஷன்ட் வந்திருப்பதாக கூறினான். பின்பு தான் இளவரசனை கவனித்த அவன் “என்ன சார் இங்கு வந்திருக்கிறீர்கள். போனில் பேசும் போது இங்கு வருவதை பற்றி ஒன்றும் கூரவில்லையே என்றான். ஒ இங்கு வருவதற்காக தான் எனக்கு போன் செய்தீர்களா” என கேட்டான்.

அதற்குள் இனியா இடையிட்டு என்ன என்று கேட்டாள்.

இளவரசன் உனக்கு நேரமாகிறது என்றாய் அல்லவா இனியா. “வாருங்கள் ரவி நாம் வெளியில் சென்று பேசுவோம்” என அவனை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

 னியா அவள் தந்தையுடன் வீட்டிற்குள் சென்ற உடனே அவள் தாய் இருவருக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்தாள்.

“அம்மா இது உனக்கே நியாயமா இருக்குதா. என்றைக்காவது எனக்கு இப்படி காபி நான் வரும் போதே கொடுத்திருப்பியா” என்று சண்டைக்கு வந்தாள்.

“ஏண்டி நீ அடங்கவே மாட்டியா. இப்ப எதுக்கு என்ன வம்பிழுக்கற. நான் உனக்கு காபி இப்படி கொடுத்ததே இல்லையா.”

“நான் ஏன்மா உன்ன வம்பிழுக்க போறேன். நானா வந்து காபினு கத்தற வரைக்கும் நீ எனக்கு காபிய கண்ல காண்பிச்சிருப்பியா.”

“நீ என் கிட்ட அடி தாண்டி வாங்க போற. உன் விளையாட்டுக்கு நான் வரல போடி” என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார்.

“பாத்தீங்களா அப்பா. நான் பேசிட்டே இருக்கேன். அம்மா போய்ட்டே இருக்காங்க” என்று தந்தையிடம் குற்ற பத்திரிக்கை வசித்தாள் இனியா.

“இல்லம்மா. மாப்பிள்ளையோட அத்தை பொண்ணு ஸ்வேதா வந்திருக்கு. அதனால எதாச்சும் டிபன் செய்யலாம்னு போய் இருப்பா.”

“ம்ம் சரிப்பா. ஸ்வேதா எங்க. நான் போய் பாக்கறேன்.”

“மாடில மாப்பிள்ள கூட தான் பேசிட்டு இருக்கு. நீ போய் பாரு.”

“இல்லப்பா. அவங்க பேசிட்டு வரட்டும். நான் அப்பறம் பேசிக்கறேன். அதுக்குள்ளே உங்க கிட்ட பேசணும். அத பேசிடறேன்.”

“என்னம்மா சொல்லனும் சொல்லு.”

“அக்கா எங்கப்பா. அவளுக்கு தான் ஸ்வேதாவை ஏனோ பிடிக்கறதில்ல. அதான் அவ பக்கத்து வீட்டிற்கு போயிட்டா. வந்திடுவா. நீ ஏதோ சொல்லனும்னு சொன்னியே அத சொல்லும்மா.”

இனியா அவள் அன்னையையும் அழைத்து வந்து இருவரிடமும் சந்துருவை பற்றி எல்லாம் கூறி இளவரசன் அவன் வீட்டிற்கு அழைத்ததையும் பற்றி கூறினாள்.

“இப்ப என்ன செய்யலாம்னு சொல்லுங்கம்மா.“

“ம்ம்ம் நீ அங்க போறது முக்கியம்னு உனக்கு தோனுச்சினா நீ போயிட்டு வாம்மா. இதுல எங்கள கேட்கறதுக்கு என்ன இருக்கு. ஏற்கனவே நீ சில பேர் வீட்டிற்கு போய் கவுன்செல்லிங் குடுக்கற தானே. இது உன்னோட தொழில் சம்மந்தப்பட்ட விஷயம். அதனால இதுல நீ தான் முடிவு பண்ணனும்” என்றார் அவள் தந்தை.

இவர்கள் இதை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதோ சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பி பார்த்தார்கள். அங்கே மாடியின் அருகே இருந்த பிளவர் வாஷ் கீழே விழுந்து இருந்தது. அதன் அருகில் ஸ்வேதா நின்றுக் கொண்டிருந்தாள்.

“சாரி சாரி பெரியம்மா. தெரியாம கீழே விழுந்துடுச்சி” என்றாள் ஸ்வேதா.

“பரவால்லம்மா. என்ன நீ மட்டும் இங்க நிக்கற. மாப்பிள்ள எங்க என்றார்” இனியாவின் தாய்.

“மாமா போன் பேசிட்டு இருக்கார். அதான் நான் கீழே இறங்கி வந்துட்டேன்”.

“ஓ சரிம்மா. வா வந்து உட்கார். நான் பொய் உனக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டு வரேன்.”

“சரிம்மா” என்று விட்டு மற்றவர்களுடன் வந்து அமர்ந்தாள் ஸ்வேதா.

அப்போது இனியாவின் செல் போன் அடித்தது. இனியா போனை எடுத்து “ஹலோ” என்றாள். அந்தப் பக்கம் ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை. இனியா திரும்ப திரும்ப “ஹலோ ஹலோ யார் பேசறீங்க” என்றாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு இளவரசன், “ஹலோ இனிய நான் தான் பேசுகிறேன்” என்றான்.

“ஓ நீங்களா இளவரசன் சொல்லுங்க. என்ன எதாவது ப்ராப்ளமா” என்றாள் இனியா.

“இல்லை நான் சொன்னதை பற்றி வீட்டில் கேட்டீர்களா என்று கேட்பதற்காக தான் அழைத்தேன்.”

“நான் ஹாஸ்பிடலில் இருந்து வந்தே சிறிது நேரம் தான் ஆகிறது. அதற்குள் நான் கேட்டிருப்பேன் என்று நினைத்து போன் செய்தீர்களா.”

“நீங்க ஹாஸ்பிடல் விட்டு வீட்டிருக்கு போகும் நேரம் எனக்கு தெரிஞ்சது தான். ஏனோ நீங்கள் வீட்டிருக்கு சென்றவுடன் இதை பற்றி பேசி இருப்பீர்கள் என்று எனக்கு தோணிற்று. அதான் இப்பவே தெரிஞ்சக்கலாமே என்று கூப்பிட்டேன் என்றான்.

இனியாவிற்கு அப்போது தான், தான் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதும் தன்னை சுற்றி இத்தனை பேர் அமர்ந்து கொண்டிருப்பதும் நியாபகம் வந்தது.

அவளால் இப்போது எந்த மறுமொழியும் கூற இயலவில்லை.

இளவரசனே தொடர்ந்து “இல்லை சந்துருவின் விஷயம் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும் என்பதால் நீங்கள் அதை பேசி இருப்பீர்கள் என்று எண்ணினேன். நீங்கள் இன்னும் அதை வீட்டில் பேசவில்லை என்றால் பரவாயில்லை நான் அப்புறம் அழைக்கிறேன்” என்றான்.

“இல்லை நான் அப்பாவிடம் பேசிவிட்டேன். அப்பா ஓகே. சொல்லிட்டார். நான் எப்போ வரேன்னு உங்கள்ளுக்கு அப்புறம் சொல்றேன்.”

“ஓகே. இனியா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். அப்புறம் இன்னொரு விஷயம். உங்கல இந்த நம்பர்ல கூப்பிடலாம் இல்ல. உங்களுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லல” என்றான்.

“நோ நோ. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல” என்று விட்டு போனை வைத்தாள் இனியா.

டுத்த நாள் சனிக்கிழமை. இனியா வழக்கம் போல் ஹாஸ்பிடலிற்கு சென்று விட்டு வந்தாள். அன்று இனியாவிற்கு ஏனோ ஒன்றும் பிடிக்கவில்லை. கார்த்திக்கே அவளிடம் என்ன அக்கா ஒரு மாதிரி இருக்கிறீர்கள் என்று கேட்டு விட்டான்.

இனியா இளவரசனிடம் இருந்து போன் வரும் என்று எண்ணி செல் போனை எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் போன் வரவில்லை. எனவே இனியாவிற்கு எரிச்சலாக வந்தது. ஏன் என்று அவள் எண்ணி பார்த்தாள். தன்னை வீட்டிற்கு வர சொல்லி விட்டு அதை பற்றி மேலும் பேசுவதற்கு அவன் திரும்ப அழைக்கவில்லையே என்று தான் என்று மனதை சமாதான படுத்தினாள்.

அன்று இரவு வரை அவன் அழைப்பான் என்று எண்ணி அவன் கூப்பிடாததால் இனியா மிகவும் சோர்ந்து இருந்தாள்.

அடுத்த நாள் காலையும் விடிந்து இனியா எழுந்தவுடன் தான் செல் போனை எடுத்து பார்த்தாள். எந்த போனும் வராததால் கோபத்துடன் மொபைலை போட்டு விட்டு குளிக்க போனாள்.

குளித்து விட்டு வந்த இனியா தான் தானே எப்போது வருவதாக சொல்கிறேன் என்று சொன்னோம். அதனால் நாமே போன் செய்வோம் என்று எண்ணி போன் செய்தாள். ஆனால் ரிங் போய்க்கொண்டிருந்தது. யாரும் எடுக்கவில்லை. திரும்ப கோபத்துடன் இனியா போனை வைத்து விட்டு கீழே சென்றாள்.

கீழே அபி டான்ஸ் ஆடுவதை எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்பு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இனியாவின் செல் போன் அலறியது. இனியா சாப்பாட்டை விட்டு விட்டு போய் போனை எடுத்தாள். அவளின் எண்ணத்திருக்கேற்ப இளவரசன் தான் அழைத்தான்.

“இனியா போன் செய்திருந்தீர்கள் போல. சொல்லுங்க இனியா” என்றான்.

“நான் இன்னைக்கு ப்ரீ தான். அதான் நான் இன்னைக்கு உங்க வீட்டுக்கு வரட்டுமானு கேட்கலாம்னு தான் பண்ணேன்.”

“ஓ. ஓகே. தாரளமா வாங்க. இத நீங்க கேட்கனும்ன்றதே இல்ல. நீங்க எப்ப பிரீயோ அப்ப வரலாம்” என்றான்.

“ஓகே.” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் இனியா.

பின்பு சாப்பிட்டு முடித்து எல்லோரிடமும் சொல்லிவிட்டு இனியா அபி அடம் பிடிக்கவே அவளையும் அழைத்துக் கொண்டு இளவரசன் வீட்டிற்கு சென்றாள்.

இளவரசன் அவன் வீட்டின் முகவரியை மெசேஜ் அனுப்பி இருந்தான். ஒரு ஆட்டோ பிடித்து அவன் வீட்டிற்கு சென்றாள். அவன் வீடு அண்ணா நகரில் இருந்தது.

பி அந்த வீட்டை பார்த்து சித்தி எவ்வளோ பெரிய வீடு பாத்தியா. நம்ம வீட்ட விட பெரிசா இருக்கில்ல என்று வியந்துக் கொண்டே வந்தாள்.

இனியாவிற்கு அந்த வீட்டிற்குள் செல்லவே ஒரு மாதிரி இருந்தது. வாட்ச்மேன் கதவை திறந்து விட உள்ளே சென்று பூங்காவை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றவளை இளவரசனே வந்து வரவேற்றான்.

இனியாவிற்கு அப்போது தான் கொஞ்சம் தைரியமாக இருந்தது.

உள்ளே சென்று சந்துரு, அவன் தாய் இவர்களிடம் இனியா பேசிக் கொண்டிருந்தாள். பின்பு அவன் தாய் இனியாவிற்கு குடிக்க ஏதாவது எடுத்து வருவதாக கூறி சென்று அபியையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

பின்பு சந்துருவும் இளவரசனும் இனியாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். இளவரசனும் நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று சொல்லி விட்டு சென்றான். சந்துருவிற்கு அவனுக்கு கவுன்செல்லிங் கொடுக்க வந்தது போல் எந்தவித சந்தேகமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இனியாவும் ஏதோ சாதரணமாக வந்தது போல் அவனிடம் உரையாடிக் கொண்டிருந்தாள். பின்பு சிறிது நேரம் கழித்து இளவரசனும் அபியும் வந்து சேர்ந்துக் கொண்டார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேலும் பேசிக் கொண்டே இருந்தார்கள். இடையில் இதோ வந்து விடுகிறேன் என்று கூறி சந்துரு சென்று விட்டு அரை மணி நேரம் கழித்து தான் வந்தான்.

அந்த நேரத்திலே இளவரசனும் இனியாவும் ஏனோ இன்னும் நெருக்கம் அடைந்தது போல் உணர்ந்தார்கள். அவர்களுக்கு ஏதும் பேச தோணாத போது அபி நடுவில் உரையாடி அவர்களை சிரிக்க வைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.