“மூடிப் போடாம ப்ளெண்டர் ஆன் செய்தேன், அவ்வளவு தான், எல்லா முட்டையும் என் தலையில வந்து சரியா நின்னுச்சு. அதோட என்னோட கேக் ஆசை முடிஞ்சுப் போச்சு! இது நடந்து பதினஞ்சு இருபது வருஷம் ஆச்சு, அதுக்கு அப்புறம் நான் ட்ரை செய்ததே கிடையாது.”
நித்தேஷ் சொல்லி சிரிக்க, கயல்விழியும் சிரித்தாள்.
“கேட்க நல்ல காமெடியா இருக்கு, ஆனால் மாரல் தான் சரியா இல்லைங்க, மாரல் ஸ்டோரி டீச்சர்.”
“என்ன மாரல் சரியா இல்லை?”
“ஒருத் தடவை தப்பா போனா என்ன? இன்னொரு தடவை பொறுமையா ப்ளான் செய்து சரியா செய்யனும்! அதை விட்டுட்டு ஒருத் தடவை தப்பா போயிடுச்சுன்னு இன்னொரு தடவை செய்யாமலே இருப்பீங்களா???”
பதில் என்று எதுவும் சொல்லாமல், அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றுடன் கயல்விழியை இமைக்காமல் பார்த்தான் நித்தேஷ்!
முதல் சில வினாடிகள், என்ன என்று புரியாமல் அவனின் பார்வையை சந்தித்த கயல், அவனின் பார்வைக்கு பின் மறைந்திருக்கும் செய்தி புரிப்படவும் மெல்ல பார்வையை அவனிடம் இருந்து திருப்பிக் கொண்டாள்!
அவள் சொன்ன கருத்து அவளின் வாழ்க்கைக்கும் பொருந்தும் என்று சொல்லாமல் சொல்கிறானாம்!!!
“கயல் சொன்னா, மாரல் என்ன எல்லாமே சரியா தான் இருக்கும்! நான் எதிர்த்துப் பேசி திட்டு எல்லாம் வாங்கிக்க மாட்டேன் ப்பா!” என்று தாமதமாக பதில் சொல்லி மீண்டும் அவர்கள் நடுவே சூழலை சுமுகமாக்க முயன்றான் நித்தேஷ்.
கயல்விழி அதைப் பற்றி கமன்ட் சொல்லாது, “என் லாயர் கிட்ட சொல்லிட்டேன், நித்தேஷ்!”