04. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா
கவி ஊருக்கு செல்கிறாள் என்றதுமே மீராக்குள் ஆனந்தம் பொங்கியது. நரேனை தனியாக அதுவும் ஹரிணிக்காக போய் சந்திப்பதை கவி அனுமதிக்க மாட்டாள்.. அவள் மீது அக்கறை என்றும்,பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே என்றும், தடுத்து விடுவாள். உண்மை என்னவென்றாள் மீரா ஹரிணி மேல் காட்டும் அக்கறை பிடிக்க வில்லை. நடுவில் வந்து மீராவிடம் அதிகமாக உரிமை எடுத்துக்கொள்ளும் ஹரிணியை ஏனோ பிடிக்கவே மாட்டேன் என்கிறது கவிதாவிற்கு. கவியின் அப்பா அவளை பார்த்தே ஆகவேண்டும் என்றும் பிடிவாதமாக மதுரைக்கு அழைத்தது மீராவிற்கு சாதகமாக போயிற்று. அதுவும் கீர்த்தனாவும் ராமை பார்த்து விட்டு இரவு தாமதமாக வருவதாக சொன்னவுடன் மீராவுக்குள் திட்டம் உருவாகி விட்டது.
ஹரிணிக்கு கோபத்தையும் குறைக்க தெரியாது. பிரியமாய் இருப்போரிடம் சண்டை போடாமலும் இருக்க முடியாது. அதனால் வரும் விளைவுகளையும் சாமர்த்தியமாய் சமாளிக்கவும் தெரியாது. நிலைமை கை மீறி போனால் "பாரு மீரா” என்று ஆரம்பித்து அழ தெரியும்.
ஹாஸ்டலில் விதிமுறைகளுள் பால்யத்தை கழித்தவளிற்க்கு பிறரின் பாசமும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் கட்டும் எரிச்சலை புரிந்துக்கொள்ள முடியவில்லை.
இதோ கவியை சென்ட்ரலில் நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்ற்கு இறக்கிவிட்டு உடன் திட்டத்தை அமல் படுத்த வேண்டியது தான். நரேன் வீடு ஒருவாறு ஹரிணி சொன்னதை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் கிளம்பிவிட்டாள்.
அரைமணி நேரம் சுற்றி திரிந்து வண்டியில் பெட்ரோல் தீர்ந்ததும் வண்டியை தள்ளிகொண்டு வந்தவள் எதிரே வேலை முடித்து வந்துக் கொண்டிருந்த இரண்டு கான்ஸ்டப்ள்சுடன் தேட ஆரம்பித்தாள். ஒருவாறு நரேன்னின் அப்பாவின் பெயரை வைத்து கண்டு பிடித்து அந்த பெரிய பச்சை வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள்.
தகிக்கும் சென்னையை மறக்கடிக்கும் போல் இருந்தது அந்த வீடு. பூச்செடிகளும், க்ரோடான்ஸ் வகை செடிகளும் என்று மூன்று வீடுகளை அடுக்காய் கொண்டிருந்தது. செடிவைக்க இடம் விட்டு வீட்டின் அளவை குறைத்தாய் பட்டது மீராவுக்குள். பிறர் நலனும் பார்பவர்கள் இருபதனால் தான் மழை தூறல் போலாவது வருகிறது என்று இருந்தது மனதுக்குள்.
சவகசமாய் ஒரு வித சலிப்போடு கதவை திறந்த மஹிக்குள் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சி. வண்டி ஏற்றும் ஸ்லோபில் கால் வைத்த மீரா வழுக்கவும் மஹியின் கையை பிடித்து சுதாரிக்க மஹி நிமிடத்தில் இறக்கை முளைத்து பறக்க முனைய
"என்னம்மா இந்த வீடு தானா " ஒரு கறார் குரல்
மஹி மீராவை பார்வையில் ஒதுக்கி பின்னே பார்த்தவனுக்கு மூளை வேலை செய்ய மறுத்தது. மனம் மட்டும் "இவள் எதுக்கு போலீஸ் கூட்டிட்டு வந்திருக்கா, நாம ஏதாவது தப்பு செஞ்சிட்டோமா???!!!"
அந்த கறார் குரல் கான்ஸ்டேபிள் "ஏன்ப்பா பொண்ணுங்கள ஏன் இப்படி தனியா இந்த நேரத்துல விடறீங்க,காலம் ரொம்ப கெட்டு போயிருக்கு ப்பா" என்று ஆரம்பித்து பல பயமுறுத்தும் செய்திகள் சொல்லி பாசமாய் "நான் வரேன் பாப்பா" என்று விடைபெற்றுக்கொண்டார்.
என்ன உணர்ச்சி இது என்றே தெரியாது யோசிக்க வேண்டாம் என்று முடிவு செய்து திக்கி திணறி மீரா "ந..ரேன்..திரன்??"
"என் அண்ணன் தான்"
"நான் நிச்சயத்துல உன்ன சாரி உங்கள பார்கலையே!!"
பார்த்திருந்தா நிச்சயதார்த்தையே நிறுத்திருப்பியே மனசுக்குள் நினைத்துக்கொண்டே "நான் வரல " என்று அமர்தாலாக சொல்லி முடித்தான்.
வாசலில் நின்றுக்கொண்டிருந்தவளை வீட்டினுள் கூப்பிட்டு உபசரித்தான். காபி போட என்று மஹி மறைந்ததும் மீரா வீட்டையும் அழகாய் அடுக்கிருந்த ஷோகேஸ்யும் மாட்டபட்டிருந்த புகைபடங்களை பார்த்து ரசிக்க தொடங்கினாள். கிராசாக சிறுவயது முதல் பதினெட்டு வயது வரை அழகாய் மூன்று பிள்ளைகளின் வளர்ச்சியை அந்த புகைப்படங்கள் வெளிப்படுத்த குட்டி கொழு கொழு பாப்பா ஒன்று அழகாய் சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்தவுடன் மீரா குழந்தையை கொஞ்சுவதை ப்போல் கொஞ்சி கொண்டிருந்தாள்.
அங்கே வந்த மகேந்திரன் "அந்த பாப்பா நான் தான்" என்று தகவல் சொல்வது போல் சொல்லி முகம் சிவந்த மீராவின் சுட்டெரிக்கும் பார்வையை தவிர்த்து காபியை கையில் திணித்தான்.
"நான்சென்ஸ்" மீரா குடித்துக்கொண்டே கடுப்புடன் சொல்ல
பார்த்தாலே ஓய்ந்து போய் தெரிகிறாள் என்று கேள்வி எதுவும் கேட்காமல் காபி போட்டு கொடுத்தது இதுக்கு தானா என்று கடுப்புடன்
"நானா நீயா??"
பார்வையை மட்டும் திருப்பியவளை கண்டு எரிச்சலுடன்
"போலீஸ் துணையோட வந்த!!, நரேன் பத்தி கேட்ட!!,இப்போ என்னை கொஞ்சிட்டு நிக்கிற" என்றான் குத்தலாக
கடைசி குத்தல் பலமாய் தாக்க பார்வையிலே சுட்டுவிடும் போல் பார்த்த மீராவை அலட்சியமாக பார்த்தான் மஹி. சட்டென்ன மண்டைக்குள் அவன் எரிச்சலுக்கு காரணம் விளங்க விளக்கம் கொடுக்கும் விதமாக
“"ஹரிணி எனக்கு ப்ரெண்ட்"”
அது எனக்கு தெரியாதா என்று எண்ணிக்கொண்டே"உட்கார்ந்து பேசலாம்" விளக்கம் கேட்கும் விதமாக மஹி மேலே தொடற சொன்னான்,
இவர் பெரிய தேசிங்கு ராஜா தொடரலாம் சொன்ன உடனே நான் கவிதை பாட ஆரம்பிக்கனும் மனதினுள் நினைத்துக் கொண்டே சின்ன பிள்ளை ஒப்பிப்பதுப் போல் சண்டை என்றும் சமாதானம் என்றும் மீரா சொல்வதை கேட்டு மஹிக்குள் சிரிப்பாக இருந்தது.
கடல் தண்ணீரை குடிநீராக மாற்றனும், பாலோ கைலொ புக்ஸ், சிட்னி ஷெல்டன் கற்பனை, இறையாண்மை, இந்திய பொருளாதாரம், பாரதியார் கவிதைகள் அனுபவம், திருக்குறள் பற்றி ஆராய்ச்சி பண்ணனும், அது இதுன்னு யோசிக்கிற செய்ற ரசிக்கிற மீராக்கு இந்த மகேந்திரன் மனசு மட்டும் புரியாம போச்சே!!! மீராவிற்கு மட்டுமா?? அந்த கடவுளுக்கும் கூட தான். பின்ன அவன் கற்பனை பண்ணி,திட்டம் போட்டு வைத்திருந்த சூழ்நிலை என்ன? நடப்பது என்ன.???
ஒரு பக்கம் மஹி மனம் தறிகெட்டு ஓட இன்னொரு பக்கம் மீராவுக்குள் நொந்து போன மனம் "அவன் இல்லாமலும் நீ நல்லா இருக்க என்று காட்டனும் மீரா, எந்த சூழ்நிலையிலும் விட்டு குடுத்துக்காத! அவன் உனக்கு தேவை இல்லை என்று இளக போன மனதை கட்டுக்குள் கொண்டு வர போராடிக்கொண்டிருந்தாள்.
படிக்கும் காலத்தில் தனியாக இருவரும் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. செமஸ்டர் நேரத்தில் படிக்க என்று லைப்ரரி பக்கம் இருக்கும் மரம் பக்கம் அமர்ந்து ஆயிரம் கதைகள் பேசியிருக்கிறார்கள். சில நேரம் சேர்ந்து பயணம் செய்திருக்கிறார்கள்.நான் ஆண் நீ பெண் நமக்குள் இடைவெளி தேவை என்று தோன்றியதே இல்லை அங்கே அப்போது. இப்போது நிலைமை இருக்கும் சூழல் ஏதோ புரியாத இடைவெளியை உணர்த்துகிறது. இருவராலும் உணரமுடிகிறது. இந்த நிமிடங்கள் முடிந்த வரை வேகமாய் கரையாதா? இந்த சத்தமான மௌனம் அதிர்வே இல்லாமல் உடையாதா??. இரு மனங்களும் ஒன்றே தான் எண்ணிக்கொண்டிருந்தது.
அடுத்த வருகையாய் நரேன் ஹரிணியுடனே வர, அதுவும் ஊருக்கு போன கவி வீட்டு சாவியையும் சேர்த்து எடுத்து சென்று விட்டதால் இன்று இரவு மீரா ஹரிணியுடன் இருக்க ஏற்பாடு என்றதும் மீராக்குள் சொல்ல முடியாத உணர்ச்சி.