(Reading time: 12 - 23 minutes)

ரேன் வரவேற்பாய் பேச ஆரம்பித்து சிவகாமியும் சுந்தரமும் திருத்தணி சென்றுள்ளதாகவும், அவன் கார் வழியில்  பிரேக் டௌன் என்றும், அவர்கள் இருவரும் இந்த இரவை பேசியே தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகவும், ஹரிணியின் வீட்டில் மீராவுக்கு துணையாக இருப்பதாக பொய் சொல்லி விட்டதாகவும் அடுக்காய் சிக்கல்களை பின்ன அந்த இரவு மிகவும் வெறுக்கும் மகேந்திரனுடனும், அருமை தோழியும் அவள் ஆருயிர் காதலனுடனும் தான்.

 

 

மீரா,"திருமணம் முன் இது தப்பு" எதிர்ப்பாக தனக்கு சாதகமாய் முயற்சி எடுத்து  பேச நரேன் "நாங்க பேச மட்டும் தான் போறோம், தனியாகவும் அல்ல கூட நீங்க இருக்கீங்க, இந்த நேரத்துல ஆட்டோ, டாக்ஸி என்று தனியாகவும் அனுப்ப முடியாது,உங்க வீட்ல இருக்கீங்க என்று பொய் சொல்லிட்டு நானும் கூட வர முடியாது" என்று விளக்கம் கொடுத்து எரிச்சலை வெளிப்படையாக காட்டி பேச மீரா காற்றுப்போன பலூன் போல் சூம்பி போனாள்.

 

அங்கே அவள் தப்பு போல் மற்றவர்கள் பார்க்க, ஒத்து போயாக வேண்டிய கட்டாயம். வேறு வழியும் இல்லை. சீறி பறக்கும் காதல் வாகனத்தில் பெட்ரோல் இல்லை. ப்ரெண்டே ஆனாலும்  பெண் தோழியை  ‘டி’ போடுவதை கண்டிக்கும் மகேந்திரன் மேல் சந்தேகமும் இல்லை.  

 

கேரம்,செஸ், கார்ட்ஸ் என்று ஆரம்பித்து அரட்டை என்று சென்று  ஐடியின்  வேலை பற்றி விவாதம் செய்து, வீட்டிலிருக்கும் சிற்றுண்டி எல்லாம் காலி செய்து ஒருவரை ஒருவர் கலாய்த்து எல்லாரும் உறங்கிய பின்னும் மகேந்திரனுகுள் குதுகலம் கொந்தளித்தது. உறக்கமும் தீண்டவில்லை.

 

இது என்ன விதியோட விளையாட்டு, எந்த கடவுளோட திருவிளையாடல், மூடியிருக்கும் அந்த கதவுக்கு பின் இரகசியம் தான் என்ன????மகேந்திரனுக்குள் பறக்கும் பட்டாம்பூச்சிகளுக்கு போட்டியாய் கேள்விகளும் பறந்தது. 

 

நாள் விடிந்து அவரவர் வேலை பார்க்க  என்று பிரிந்து நாட்கள் சென்ற பின்னும் அந்த சந்திப்பும் சக்கரையாய் கரைந்த நிமிடங்களும் மூவர் மனதில் பொக்கிஷமாக பதிய மீரவுக்குள் மட்டும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. மறக்க வேண்டிய ஒன்றுமாக!! ஹரிணியும் நரேனும் அதை பற்றியே பேசி தங்களுக்குள் பிணைப்பை வளபடுதினார்கள் என்றால் மஹி தனுக்குள்ளே புத்தகத்தில் வைத்திருந்த மயில் இறகை வருடி பார்க்கும் சிறு பிள்ளைப்போல் நினைவுகளை வருடி பார்த்துக் கொண்டிருந்தான். சொல்லி விட்ட வார்த்தையின் விளைவு விட சொல்லாமல் போன வார்த்தை அழுத்தமான அர்த்தம் கொண்டது. தெரியாமல் போனது மீராவிற்கு.

 

கவி ஊரிலிருந்து திரும்பியதில் இருந்து வீட்டின் பிரச்சனைகளை பற்றி யோசித்ததில் மீராவின் தான் இல்லாமல் போன நாட்கள் பற்றி கேட்கவும் இல்லை,மீராவும் கல்லூரி,ப்ராஜெக்ட் என்று மும்முறமாக இருந்ததில் சொல்லவும் இல்லை. முன்பை விட கீர்த்தனா ராமிடம் நெருக்கம் காட்ட மற்ற  தோழிகள் இருவரும் இடம் கொடுத்து ஒதுங்கினர். 

 

காலமும் விதியும் அதன் போக்கில் பின்னி பிணைந்து வானவில்லின் வர்ணங்களை தூவி செல்ல,  மீரா அவள் இலக்குகளின் அட்டவணையில் தோற்ற முதல் காதலை ஒதுக்கி அடுத்த இலக்கான கடல் நீரை குடிநீராக மாற்றும் ஆராய்ச்சியை திட்டத்தில் இறங்கிவிட்டாள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் இதய துடிப்புடன் இதுவும் சேர மற்றது  கண் எதிரே மறைந்தது.

 

நரேன்குள்  தான் ஹரிணியின் அன்பிற்கு அடிமையாகுவது புரிந்தாலும் அதை தடுக்க தோன்றாமல் வேண்டும் என்று எதிர்பார்க்க தான் தோன்றிற்று. எதிலும் முதலாகவே வந்து புகழ் பெருமை என்று அனுபவித்திருந்தாலும் ஹரிணியின் பாராட்டல் திகட்டவே இல்லை.

 

பெண் பார்க்கும் போது  தழைக்க புடவை கட்டி நடக்க தெரியாமல் வந்த ஹரிணி  சோபாவின் காலில்  இடித்துக் கொள்ள அந்த வலியின் வேதனை அரை நொடியே அவள் முகத்தில் தெரிந்தது.அதை யாருமே கவனிக்கவில்லை நரேன் தவிர. அந்த நிமிடமே அவள் வலியை அவன் உணர்ந்தான்.எந்த விரல் இடிசிருக்கும் எப்படி வலிச்சிருக்கும் ஆராய்ச்சி, தனியாக பேச அனுமதித்த போது வலிக்கிறதா என்ற கேள்விக்கு அவள் கண்ணில் தெரிந்த பிரகாசம் மற்றும் ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு எல்லாம் சேர்ந்து திருமணதிற்கு சம்மதம் அங்கேயே அந்த இடத்திலயே  சொல்ல வைத்தது.

 

க்ளைன்ட் மீட்டிங் என்று அவன் பரபரப்போடு நடமாடிக்கொண்டிருக்கும் போது அவசரம் போல் போன் செய்து  "கல்யாணத்துக்கு முன்னாடி ஹேர்கட் பண்ணிக்க கூடாது சொல்றாங்க எனக்கு ஆசையா இருக்கு செய்துக்கட்டா" என்று கேட்கும் போது,அவள் காலேஜ் கிளம்பும் முன் போன் செய்து "இன்னிக்கு நான் கிரீன் வித் எல்லோ சுடி நீங்க என்ன ஷர்ட் என்று அவள் கேட்கும் போது, அன்று செய்த எல்லாமும் ஒப்பிக்கும் போது, வாங்கின கண்மை முதல் செருப்பு வரை சொல்லும் போது அந்த நிமிடம் எரிச்சல் வந்தாலும் சுற்றும் உலகில் என்னை உலகமாக எண்ணி சுற்றும்  ஜீவன் இருக்கிறது என்று எண்ணம் கர்வம் ஏற்றியது.

 

"மீராக்குட்டி போன் வந்ததா?" ஏக்கமாய் கேட்கும் மனைவியை வாசுதேவன் தேற்றும் விதமாக கவி போன் செய்தாள் என்றும் மீரா ப்ராஜெக்ட் பற்றி அலைச்சலில் இருப்பதாகவும் சொல்லி முடித்தார்.

 

மீரா பேசவில்லையே என்று சந்திரமதி கலக்கமாக பார்க்க "அப்படியே பொண்ணு அம்மா கிட்ட கொடுங்க அப்பா" சொல்லிட்டாலும் இவ பேசிட்டாலும் என்று வாய் வரை வந்ததை  பேசாமல் நிறுத்திகொண்டார். சில நேரத்தில் இவர்கள் சண்டையை ஆராய்ச்சி செய்தும் தெரியவில்லை விடை எதற்கு சண்டை என வாசுதேவனுக்கு. அவருக்கு தெரிந்ததெல்லாம் அந்த பெங்களூர் நகரத்தில் இருப்போரின் வருமான வரி பற்றி தான். தெரிந்த இன்னொன்று மகளின் ஆர்வம்,ஆசை,குறிக்கோள். 

 

பெண் குழந்தை பிறக்காத வம்சத்தில் பிறந்த பெண் அதுவும் தன் அம்மாவின்  சாயலை கொண்டு பிறந்த  பெண்ணை வாசுதேவன் என்றுமே ஒரு வார்த்தை சொன்னதில்லை. அவள் சுதந்திரத்துக்கு தடை விதித்ததில்லை.

 

தீங்கான வழியில் சென்ற கணவனை விட்டு கர்நாடக  தமிழ்நாடு மாநிலத்தின் எல்லையில் ஒரு கிராமத்தில் குடியேறி அங்கே பள்ளிகூடத்தில் ஆசிரியராக பணி புரிந்து தனியாக  அந்த ஊரில் மதுகடைகளை எதிர்த்து அகற்றி அந்த கிராமத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்து, பெண் கொடுமைக்கு அப்போதே விடிவு காண போராடி, தன்னையும் காப்பாற்றிக்கொண்டு பிள்ளையும் வளர்த்த தன் அம்மாவினால் எப்பவுமே பெண்களின் மேல் வாசுதேவனுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்.

 

போற்றும் பெண்மையை அதன் வளர்ச்சியை அவர் பெற்ற மகளிடம் பார்க்கும் போது வாசுதேவனுக்கு என்னோட பெண் குழந்தை என்று பெருமையாக இருக்கும்.சில நேரம் மீராவின் செயலில் தாயின் சாயல்களை கண்டு அம்மா என்று உணர்ந்தும் இருக்கிறார்.

 

வாசுதேவனின் தாய் சத்யபாமா தைரியம் என்ற வாக்கியத்திற்கு அர்த்தம் போல் இருந்தவர். பாமாம்மா கோப பட்டு சீறினார் என்றால் எப்பேற்பட்டவரும் தங்கள் தப்பை உணர்ந்து திருந்துவர். இயல்பாகவே இளகிய மனம் கொண்டவர் அடுத்தடுத்து பட்ட காயங்களில் போராடி வாழ்ந்து வென்றவர்.

 

மீராவின் கோபமும் அப்படித்தான் தப்பென கருதி கோபபட்டாள் சாமானியமாக மன்னிக்க மாட்டாள். பொரிந்து தள்ளினாலும்  மனதில் வஞ்சகம் இருக்காது.பிறர் நல்லதே பார்க்கும் இயல்பு இருக்கும். 

 

நல்ல நண்பன், காதலுடன் மனைவி, மணி மணியாய் பிள்ளைகள் நேரத்தை கடத்த வேலை, வாழ கொஞ்ச பணம், தன்நம்பிக்கையை  சோதித்து கொள்ள பிரச்சனைகள், ரசிக்க உலகம் இது போதும் என திருப்தியுடன் வாழும் வாசுதேவன் மீராவிற்கு முன் மாதிரி. 

 

எப்போதும் ஒளி தரும் சூரியனை போற்றாத கவிஞர் உள்ளங்கள் ஏன் நிலவை மட்டும் போற்றி புகழ்கிறார்கள். இருள் சூழ்ந்து கண்கள் வெளிச்சம் தேடும் நேரத்தில் ஒளியை கடன் வாங்கி தரும் அதன் கருணையினாலா???!!. சிநேகமான பார்வை, கனிவான சிரிப்பு.அன்பான வார்த்தை போதுமே உலகத்தை கையில் அடைக்க.  

 

தொடரும்

Go to Ninaikkatha naal illai rathiye 03

Go to Ninaikkatha naal illai rathiye 05

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.