(Reading time: 33 - 66 minutes)

10. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்து கொண்டிருந்த மீராவிடம் கார்த்திக் வந்து சந்தியாவின் சவாலையும் அதன் பின் நடந்தவற்றை கூறி , “ இப்போ சந்தியா போகப் போறது   அவ படிச்ச காலேஜ் பக்கத்தில இருக்கிற காபி டே அண்ணி” என,

“எனக்கும் அவளை  பாக்க ஆசையா இருக்கு. நானே மது இல்ல சூர்யாவை கூட்டுகிட்டு வந்துருப்பேன். தூக்க கலக்கத்துல பசங்க இன்னும் நைய்...நைய்ன்றாங்க. சாரி, காதி  என்னால  ஹெல்ப் பண்ண முடியல.” என மீரா சொல்ல,

“என்ன அண்ணி இதுக்கு போய் பீல் பண்றீங்க. ஒரு வெட்டி பையன் எனக்கு ப்ரண்டா இருக்கிறப்ப எனக்கு என்ன கவலை” என்றான் கார்த்திக்.

“என்றென்றும் என்றென்றும் புன்னகை....

முடிவில்லா புன்னகை …

இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் …”

பாட்டு கேட்டவாறே  பைக்கை ஸ்டைலாக  ஓட்டுகிறேன்  பேர்வழி என நடு ரோட்டில் குறுக்கும் நெடுக்கும் ஓட்டி  வந்த சிவாவை

“டேய்..... வீட்டில சொல்லிட்டு....வந்தியா...எத்தனை வாட்டி ஹார்ன் அடிக்கிறது...வந்துட்டான்னுங்க.... காதுல ஸ்பீக்கர் மாட்டிக்கிட்டு சாவு கிராக்கி “.என   திட்டி விட்டு சென்றான் லாரிக்காரன்.

இந்த  சிவா தான் கார்த்திக்கின் நண்பேன்டா சிவா. அவனது செல்போனில்  கார்த்திக்கின் அழைப்பு வர, எடுத்த சிவாவிடம் “சிவா நாலு மணிக்கு காபி ஷாப்புக்கு போகணும்”

சிவா, “நாலு மணிக்கா...நான் கொஞ்சம் பிஸி மாப்ள...அஞ்சு மணி ஓகே வா”

கார்த்திக், “வெட்டியா இருக்கிறதுல தான பிஸியா இருப்ப?... ஒரு பொண்ணை பாக்கணும் ….வந்து சேரு”

சிவா “ரெம்ப தேங்க்ஸ் மாப்ள.” என்று நொந்தவனாய். பின் “ அது சரி பொண்ணா...?  டைமென்ஷன் சொல்லு ”

கார்த்திக் “  டைமென்ஷன்னா ?”

சிவா “நீளம், அகலம், உயரம் இத்யாதி இத்யாதி டா...ஹும்  நீயே சாமியாரச்சே  உன்கிட்ட கேட்டேன் பாரு. நான் ஒரு பொண்ணை பாக்கணும்னா   அந்த பொண்ணுக்கு  சில பல குவாலிபிகேஷன்ஸ்  வேணும் மாப்ள ”

கார்த்திக் “உன்னை யாரு பாக்க சொன்னா? என் கூட வந்தா போதும். ஆனா மச்சி, உன் ரேஞ்சுக்கு குவாலிபிகேஷன் அப்படி இப்படின்னு சொல்லி எனக்கு சிரிப்பு காட்ட கூடாது. ... சீக்கிரமா வா “

சிவா “சரி..... ஒரு பத்து நிமிஷத்தில் உங்க வீட்டுக்கு வர்றேன்“ என சிவா கிளம்பி கார்த்திக்கின் வீட்டுக்கு வர இருவரும் காபி கடைக்கு புறப்பட்டனர்.

க்தி, சந்தியாவிடம் “ஜந்து, இந்த பேதி மருந்து கண்டிப்பா கார்த்திக்கு கொடுக்க போறியா? உன் பாஸ்டி அவன்” என்றதற்கு சந்தியா,

“பாஸ் மாதிரியா பேசுனான்? விட்டா போன்லே கிஸ் அடிச்சிருப்பான்...அவனுக்கு இது தான் ஆப்பு. ஆனா சக்கு, அப்பாடா....... சந்தியா நம்மளை மறந்துட்டா........ மன்னிச்சு விட்டுட்டான்னு மட்டும் தப்பு கணக்கு போடாத. உனக்கும் ஆப்பு வெயிடிங்... இன்னைக்கு கார்த்திக் வாராட்டினா இந்த பேதி மருந்து வேஸ்ட் ஆகாம உனக்கு யூஸ் ஆகிடும். அப்படி மட்டும் அவன் வந்தான் நீ செத்த. உன்னோட ருக்குமணி ருக்குமணில தான் கைய வைப்பேன்” என்று, காபி டே கடைக்கு அருகில் வண்டியை நிறுத்திய படி.

அவள் பின்னால் அமர்ந்திருந்த  சக்தி வண்டியில் இருந்து இறங்கிய படி, “அடி பாவி ஜந்து, பூமாக்கா பர்ஸ்ட் நைட்ல பண்ண மாதிரி எனக்கும் ஏதாவது செய்து வைச்சுடாதடி” என்றாள் கெஞ்சுதலாக.

சந்தியாவோ கொஞ்சம் கூட இளகாமல் “மன்னிப்பு கூட ஆப்பா தான் வழங்கப்படும்  என் மக்கு சக்கு” என்றபடி  தோழிகளுடன் ‘காபி டே’ கடையை நெருங்க அருகில் இருந்த புதிய கடையை பார்த்தவள், “கேர்ள்ஸ், இந்த புது கடைக்கு போலாம். ஒரு வேளை கார்த்திக் என் வீட்டுக்கே போன் போட்டு நம்ம காபி டே விசாரித்து இருப்பான். சரியான காரியவாதி. நினைச்சதை சாதிப்பான்.” என்றபடி தோழிகளுடன் அந்த புதிய கடைக்குள் நுழைந்தாள்.

காபி கடையின் கடைசி மேஜையில் சிவா வாசலை பார்த்த படி உட்கார்ந்திருக்க, கார்த்திக் தலையில் ஒரு தொப்பியுடன் அவன் எதிரில் அமர்ந்து இருந்தான்.  

“டேய் இது என்ன சன் க்ளாஸ்? ஓக்ளே வா?...சூப்பரா இருக்கு” என கார்த்திக் டிஷர்ட்டில் தொங்கிய கருப்பு கண்ணாடியை பார்த்து சிவா சொல்ல , “பிடிச்சிருந்தா வச்சுக்கோ மச்சி...” கார்த்திக் அதை கொடுக்க, உள்ளூர ஆசை இருந்தாலும் “வேண்டா மாப்ளே ...இருக்கட்டும் “ என சிவா மறுக்க, “அட....இந்தா போட்டுக்கோ” என கார்த்திக் அவன் கைகளில்  திணித்தான்.

இந்த காரியவாதி கார்த்திக்கின் செய்கையில் வில்லங்கம் தெரியாமல் உருகிய சிவா, “தேங்க்ஸ்டா..உன்னை நினச்சா புல்லரிக்குதுடா...என் பிரண்டை போல யாரு மச்சான்” என்று பாடிய படி அந்த கருப்பு கண்ணாடியைஅணிந்து கொண்டான்.  

சற்று நேரத்தில், “மாப்ள இப்போ    ஒரு சூப்பர் பிகரு வருது அதுதான்  உன் ஆளா? ” என,  கார்த்திக் அதற்கு “ப்ச்...நீ அந்த  ஆண்ட்டிட்ட   தர்ம அடி வாங்கப்போற” என்றான் சலிப்புடன்.

“சாமியாருன்னு நினச்சேன். சன் கிளாஸ்ல ரிப்ளக்ஷனை பார்த்தே ஆன்ட்டின்னு சொல்லுற. நான் சொல்ல சொல்ல கேட்காம இங்க கூட்டிட்டு வந்துட்ட...உன் ஆளு இந்த நேரம் அடுத்த கடைல  காபி குடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்ப்......” என்று சொல்லிக்கொண்டிருந்த சிவா  ஒரு நொடி பேச்சில்லாமல் பின்  

“டேய் தேவதங்க  கூட்டமா வருதுடா  ....நடுவுல ஒரு பச்சக்கிளி செம ஹோம்லி லுக் ...” என, அவன் கண்ணாடியில் சந்தியாவின் பிம்பத்தை பார்த்த கார்த்திக்  “என் ...சன் க்ளாஸ்ஸ கொடு” என கூசாமல் கேட்க, சிவா ஏமாற்ற பார்வை வீசி,

“கொடுக்கிற மாதிரி கொடுத்திட்டு, பிகருங்க முன்னாடி இப்படி பண்றியேடா...” என ஆதங்கத்துடன் சொல்லியபடி அதை கழட்டிக் கொடுக்க,  சந்தியாவை சிவா பார்த்தது பிடிக்காத கார்த்திக் “நீ பாத்தது சந்தியாவை” பல்லை கடித்து கொண்டு கண்களில் சினத்துடன் சொன்னான் கார்த்திக்.

“சாரி மாப்ளே...” என தாழ்ந்த குரலில் சொன்ன சிவாவிடம், “அவங்க அப்பா வேற மிலிட்டரி மச்சி... கோபம் வந்துச்சுனா அவரு கன்  தான் பேசுமாம் ” என்று நிதானமாய் சொன்ன   கார்த்திக்கை ஒரு திகிலுடன் பார்த்தான் சிவா.  

ண்பிகளுடன் வந்த சந்தியா, “கேர்ள்ஸ், நம்ம லாஸ்ட் பெஞ்சை ஏதோ தொப்பிக்காரன் பிடிச்சு வச்சிருக்கான்...அவனுக்கு முன்னாடி உக்காந்து இருக்கிறவனை பாறேன்”.

சக்தி, “இந்த முழி முழிக்கிறான். அவசரமா போகணுமோ என்னவோ ...” என சிவாவை பற்றி விமர்சித்த படி கார்த்திக்-சிவா  உட்கார்ந்திருந்த மேஜைக்கு முந்தின மேஜையில் அமர்ந்தனர்.

சக்தி சந்தியாவிடம் “மணி நாலே காலாச்சு....உன் லவ் பர்ட் அவுட்டா? கண்க்ராட்ஸ் சந்தியா...”,

“யார் சொன்னா...நீங்க தான் லேட்...நாங்க அப்பவே வந்துட்டோம்“ என குரல் கொடுத்த படி கார்த்திக் அவர்கள் பக்கம் திரும்ப ...அவனை பார்த்து சந்தியா விழி பிதுங்க உறைந்து போனாள்.

“ஹே...ஹனி...நைஸ் டு மீட் யு அகைன்” என்றான் கார்த்திக். பதில் பேசாமல் இன்னும் அதிர்ச்சியில் இருந்த சந்தியாவிடம்,

”நீ எனக்கு பயந்து போய் புது கடைக்கு வருவன்னு கெஸ் பண்ணேன் ஹனி ...கரெக்ட்டா இருக்கு.... வேவ் லென்த் ரெம்ப நல்லா இருக்குல..மை ஸ்ஸாண்டி பேப்” என சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்த சந்தியா அடுத்த திட்டத்திற்கு தயாரானவளாய் மனதிற்குள்,

“நான் பேப்பா... உனக்கு பேதியாக போறதை அந்த கடவுளே வந்தாலும் தடுக்க முடியாது” என்று, “ம்....பெரிய சையின்டிஸ்ட் தான். மங்கி காட்டுக்குள்ளே எந்த மூலைக்கு ஓடினாலும்  விடாம தேடி பிடிச்சிடுவீங்க போல .... வாங்க வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க“ என்று சற்று நகன்று உட்கார்ந்து கார்த்திக்கிற்கு இடம் கொடுத்தாள் சந்தியா.

ஆறு பேர் உட்கார்ந்து உட்காரும் படி இருந்த இருக்கையில்,   சக்தி, சந்தியாவுடன் ஒருபுறமும், மற்ற இரு தோழிகளும் எதிர் புறமும் உட்கார்ந்திருக்க கார்த்திக் சந்தியா அருகில் அமர வரும் போது, “எக்ஸ்க்யூஸ் மீ மே ஐ கம் இன்...” என்றான் சிவா.

கார்த்திக் சிவாவை அவர்களுக்கு  அறிமுகபடுத்திய பின், எதிரில்  அமர்ந்திருந்த சந்தியாவின் தோழிகள் அருகில் உட்கார முயன்ற சிவாவை தடுத்து, “சிவா லேடீஸ்டா...நீ என் பக்கத்தில் உக்காந்துக்கோ” என சக்தியை  எதிர்புறம் அனுப்பி விட்டு சிவாவை தன் அருகில் அமர்த்தினான்.

சிவா தன் புண்பட்ட மனதுக்குள் “ஏன்டா...நீ மட்டும் உன் ஆளு பக்கத்தில உட்காருவ...உன் நல்ல புள்ள இமேஜ்க்கு நான்  பலிகடாவா...” என எண்ணிக்கொண்டே “ஹலோ...சிஸ்டர் “ என்றான் சந்தியாவை பார்த்து.

சந்தியா அதற்கு, “சிஸ்டரா.... எல்லாரும் எங்களுக்கு அண்ணனா ஆகிட்டா நாங்க யாரை கல்யாணம் பண்றது...சரி சரி..நீங்க எங்க பாஸ் அளவுக்கு இல்லாட்டின்னாலும் சுமாரா இருக்கிறதுனால உங்களை அண்ணன்னா ஏத்துக்கிறேன்” என்றாள்.

இந்த பதிலை எதிர்பார்க்காத சிவா அரண்டு போக, “இது என் பிரன்ட் சக்தி...” என சக்தியை அறிமுகப்படுத்தினாள்.  சிவா சந்தடி சாக்கில் சக்தியிடம் “சிஸ்டர் சொல்ல வேண்டாம்னா ….அப்ப SMS வொர்க் ஆகுமா....சிவா மனசுல சக்தி” என கேட்க,

அவள் “ஹலோ... நான் MMS... Mrs. மாங்குடி சுப்ரமணியம் ஆக போறேன்.” என்றாள்.

 “ஓ....உங்க உட்பி பேரு ஒரு விதமா  இருக்கே! கச்சேரில நாதஸ்வரம் வாசிப்பாரோ ?” என சிவா நக்கலடிக்க,

சக்தி,  “ம்..... வேற விதமா  கச்சேரி நடத்துவார் சிவா. மெயினா எக்குத்தப்பாக SMS அனுப்பிறவங்களை வச்சு தான் கச்சேரியே. இன்னும் புரியலையா ….அவர் சைபர் க்ரைம் போலீஸ்...“

அதற்கு மேல் சக்தியிடம் பேச முடியாமல், இருந்தும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல்  சந்தியாவிடம் “உங்க மத்த ப்ரண்ட்ஸ் பத்தி சொல்லலை சிஸ்டர்” என்றான் சிவா.

சந்தியா அதற்கு “சொல்றேன். ....இவ அப்பா அரசியல்வாதி. ஒரே ஒரு வக்கீல் அண்ணனுக்கு ஒரே ஒரு தங்கச்சி இவ தான். ஏதாவது பையன் வாலாட்டினா முதல்ல அப்பா ஆளு வச்சு அடிப்பாரு, அப்புறம் அண்ணன் ஏதாவது கேஸ்ல சிக்க வைச்சிடுவார் ..நீங்க ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறது மாறின்னா” என்று சொல்ல வந்தவளை தடுத்த சிவா, “போதும் ...போதும்..தெரியாம கேட்டுட்டேன்“ என்று தலை மேல் இருகரம் கூப்பி பெரிய கும்மிடு போட்டான் சிவா.

சக்தி, “எப்படி காபி ஷாப்பை கண்டுபிடிச்சீங்க?” ஆர்வமாக கேட்டாள்.

சிவா, “இது என்ன அண்டா காகஸ  இரகசியாம..” அலட்சியாமாக தோளை குலுக்கி சக்தியை பார்த்து சொல்ல, கார்த்திக், சந்தியாவிடம் “உன் பிரண்ட மதுவுக்கு  நீ சொன்ன காபி ஷாப் மறந்துடுச்சாம். உங்க வீட்டிக்கு போன் பண்ணப்போ, உன்  அக்கா சொன்னாங்க....அதையும் நாங்க சிவா தங்கச்சிட்ட டபுள் செக் பண்ணோம். சிவா தங்கச்சி உன் சீனியர். அவ தான் சொன்னா உன்னை பத்தி... காலஜ்ல இருக்கிற நேரத்தை விட காபி டேல தான் அதிகமா  இருப்பன்னு”  என்றான்.

சந்தியா, “அதுக்கு தான் இந்த புது கடைக்கு வந்தேன். கரெக்ட்டா மோப்பம் பிடிச்சுடீங்க...கன்க்ராட்ஸ். நீங்க வின்” என்றாள் சிரித்தபடி.

சந்தியாவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து கொண்டிருந்த கார்த்திக்  “கொஞ்சம் கூட பீல் பண்ணாம கூல்லா இருக்கா...கார்த்திக் இது சரியே இல்ல.. ஏமாந்த பூனை ஆகவே கூடாது” மனதிற்குள் தீர்மானம் போட்டான்.

“ஹனி, உன்னைத் தேடி ஓடி வந்த மச்சானுக்கு ரிவார்ட் குடுக்கவே  மாட்டியா ...” என்றான் அவள் காதோரமாய்   கிறக்கமாக.

“இப்படி சொல்லுதீக..... என் ஆசை மச்சானுக்கு இல்லாததா.....சுட சுட கொடுக்குறேன் ….ஆனா, உங்களால தாக்குபிடிக்க முடியுமான்னு தெரியலை ”

என்றாள் சந்தியா மனதிற்குள் கார்த்திக் பேதி மருந்தின் தாக்கத்தில் திணறுவது போல  கற்பனை செய்து கொண்டே.

“அதெல்லாம் முடியும். எப்போ கிடைக்கும்?” என்றான் பார்வை அவள் உதடுகளை மொய்த்த படி.  சந்தியா, “ரொமாண்டிக் லுக்கு? உன் கதை முடியும் நேரமிது …” என்று மனதிற்குள் பாடிவிட்டு, கார்த்திக்கிடம்  “அதுக்குள்ள எப்படி பாஸ்? நிறைய க்ரௌவ்ண்ட் ஒர்க் இருக்கே. முதல்ல காபியை ஆர்டர் பண்ணலாம்” என்று அவரவருக்கு  விருப்பமான காபியை வரவழைத்தனர்.

ந்தியா பேதி மாத்திரையை தனது கைகுட்டைக்குள் வைத்துக் கொண்டாள். கார்த்திக்கை திசை திருப்ப, தனது நண்பன் அனுப்பிய ஐபோனை கொடுத்து “கார்த்திக்,  எங்க நாலு பேரையும்  போட்டோ எடுக்க முடியுமா.” என , அவனோ சிவாவை கைகாட்ட,

“சிவா வேண்டாம். நீங்க தான் இதுல எக்ஸ்பர்ட் போட்டோகிராபர். இந்த போன்ல பர்ஸ்ட் போட்டோ உங்க கையால எடுக்கணும். எங்களை தூரத்தில இருந்து ஒரு லாங் ஷாட் எடுங்க” என சந்தியா வற்புறுத்த, அவன் இருக்கையில் இருந்து நகன்று வெளியே செல்ல திரும்பும்  பொழுது கண்ணிமைக்கும் நேரத்தில் அவள்  கைக்குட்டையில் இருந்த மாத்திரை  காபிக்குள் கலந்தது.

பின், பேசிக்கொண்டே சந்தியா காபியை சுவைத்து விட்டு கீழே வைக்க, அவளது காபியை கார்த்திக் வேகமாக எடுத்தான்.  அதை ஒரு மடக்கு பருகி விட்டு “ப்ச்ச்...சப்புன்னு இருக்கு..ஹனி …..சரியா மிக்ஸ் ஆகலை...இந்தா” என்று கொடுக்க, “ச்சே....எனக்கு ஒன்னும் வேண்டாம் “ என்றாள் முகம் சுளித்தபடி.

“அப்ப  இதை குடி ...ப்ரெஷ் ஒன்” என அவனது காபியை காட்டினான்.

“இவனக்கு வச்ச ஆப்ப நம்ம பக்கம் திருப்புறானே ச்சை..” மனதிற்குள் எரிச்சலுடன், வெளியே   “ எனக்கு காபியே வேண்டாம்...ப்ளீஸ் என் சார்பா அதையும்  நீங்களே  குடிங்க...என் பர்த்டே ட்ரீடை வேஸ்ட் பண்ணாதீங்க“ என்றாள் கெஞ்சலாக.

“என் ஹனி குடிச்ச காபியை குடிச்சிட்டு என்னால வேற எந்த காபிய குடிக்க முடியும் சொல்லு?” என கார்த்திக் மறுக்க, அதை பார்த்துக் கொண்டிருந்த சிவா

“ஏன் மாப்ள?...பாவம் சிஸ்டர். பிறந்த நாளு அதுவுமா...கவலைய விடுங்க. நான் குடிக்கிறேன்” என்று சிவா வாங்கி கொண்டான்.  

சந்தியா மனதிற்குள் “தானா வந்து சிக்குற...உன்னை என்ன செய்ய” சிவாவின் பரிதாப நிலைமையை மனதிற்குள் நொந்து கொண்டே. இருந்தும் அவனிடம் “இருக்கட்டும் சிவா.. ரெண்டு காபியெல்லாம் சம்டைம்ஸ்  வயித்துக்கு ஒத்துக்காது “ என்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.