(Reading time: 7 - 14 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 27 - நவ்யா

விடாமல் தொடர்ந்து அடித்த அழைப்பு மணி சத்தம் எரிச்சலைக் கொடுக்க காருண்யா எழுந்து வந்தாள்.

   

அதற்குள் வீட்டு வேலை செய்யும் ஜெயஸ்ரீ வந்திருந்த நபருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

   

காருண்யா திரும்பி நடக்க நினைத்தப் போது, “நான் சாரை பார்த்தே ஆகனும். ஜனனின்னு பெயரை சொல்லுங்க,” என சொன்ன குரல் அவள் காதில் விழுந்தது.

   

“ஜனனி?”

   

ஆச்சர்யமும், அதிசயமுமாக முணுமுணுத்த காருண்யா வாசல் அருகே ஓடோடி வந்தாள்.

   

“காருண்யா!” என ஜனனி சொல்லி முடிக்கும் முன்பே அவளை அணைத்துக் கொண்டாள் காருண்யா.

   

“ஜனனி, உங்களை திரும்ப சந்திக்க முடியும்னு நான் நினைக்கவே இல்லை!”

   

”என் நம்பர் உங்க கிட்ட இருந்ததே? மிஸ் செய்தீட்டீங்களா என்ன? அப்போ கூட அப்பா கிட்ட சொல்லி இருந்தா அவர் ஹெல்ப் செய்திருப்பாரே?”

   

“அப்பா என்னோட பேச மாட்டேங்குறார் ஜனனி!”

   

“விஸ்வநாதன் சாரா?” எனக் கேட்ட ஜனனி, அப்போது தான் காருண்யாவை சரியாகப் பார்த்தாள்.

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.