சொல்லி விட்டு அரவிந்த் சாந்தியை குறுகுறு என ஒரு பார்வை பார்த்தான். அவளோ,
“ஓஹோ....” என்று மட்டும் சொன்னாள்!
“விளையாட்டுக்கு சொல்லலை ஹனி... ஒரு டாக்டரா இந்த ஹ்யூமன் பாடி பத்தி படிச்சிருக்கேன்... எனக்குத் தெரியும்... ஆனால் அதையும் தாண்டி, என்னை ரொம்ப டிஸ்டர்ப் செய்ற நீ... உன் ஸ்மைல்... உன் லிப்ஸ்... உன் ஐஸ்... ஹுஹும், இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது...”
அரவிந்தின் அணைப்புக்குள் இருந்த கைகளை விடுவித்து வெளியே எடுத்து, அவனின் முகத்தை கையில் ஏந்திய சாந்தி,
“யார் உங்களை பொறுமையா இருக்க சொன்னது...??” என்றாள் வெட்கம் கலந்த புன்னகையுடன்...
அரவிந்திற்கு ஆச்சர்யமாக இருந்தது...
சாந்தியுடன் தனியாக நேரம் செலவிட விரும்பி தான் அவளை அங்கே அழைத்து வந்திருந்தான்... சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று நினைத்து சொல்லாமல் வைத்திருந்தான்...
மற்றபடி அவன் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை... வேறு எதையும் சாந்தியிடம் இருந்து எதிர்பார்க்கவும் இல்லை...
எப்போதும் போல அவளை சீண்டி பார்க்க தான் இந்த பேச்சை ஆரம்பித்தான்...
அவனின் முகத்தை பார்த்த சாந்தியின் புன்னகை பெரிதானது. அவனின் முகத்தை விடுதலை செய்து, மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“என்னடா இவ இப்படி சொல்றாளேன்னு யோசிக்குறீங்களா அரவிந்த்?? என் மனசு, உடம்பு, உயிர் எல்லாமே உங்களுக்குத் தான்... உங்களை மாதிரி யாருமே என் கிட்ட அன்பு காட்டினதில்லை... நீங்க எது கேட்டாலும் நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.