மறுநாள் மாலையில் அழகரசனுக்குப் போன் வந்தது, மதுமதிதான் போன் செய்திருந்தாள் அவள் போன் என்றதும் ஆர்வமாகிப் போனான் அழகரசன்
”சொல்லு மதுமதி”
”எப்படியிருக்க அழகு”
”நான் நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க பத்திரமா போய் சேர்ந்தியா”
”ஆமாம் பத்திரமா வந்துட்டேன், சாரி என்னால ஊருக்கு வந்ததும் போன் பண்ண முடியலை இங்க முக்கியமான வேலை இருந்தது அதான்”
”பரவாயில்லை நான் எதுவும் நினைக்கலை அப்புறம் என்ன விசயம் திடீர்ன்னு போன் பண்ணியிருக்க“
”அது நான் சென்னைக்கு வந்துட்டேன்ல அதை சொல்ல போன் பண்ணேன்“
”ஓ அப்படியா அப்புறம்” என அவன் கேட்க அவளோ அமைதியானாள். என்ன பேசுவதென தெரியவில்லை, சில நொடிகள் மௌனம் பின்பு மெதுவாக அவனே பேசினான்
”என்ன செய்ற மதுமதி”
”வீட்ல இருக்கேன் ரெஸ்ட் எடுக்கறேன் ஆமா நீ என்ன செய்ற“
”நானும்தான் வீட்ல ஓய்வு எடுக்கறேன்”
”ஏன் விவசாய வேலை முடிஞ்சிடுச்சா“
”காய் எல்லாம் பறிச்சாச்சி மதுமதி, இனி காய் எல்லாம் வளர்றதுக்கு 3 இல்லை 4 மாசம் ஆகும் அதுவரைக்கும் எனக்கு எந்த வேலையும் இல்லை ஜாலியா பொழுது ஓட்டுவேன்”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
meeting la ena natakum