முடிவு செய்வது என்னவோ சுலபமாக தான் இருந்தது... அதை நடைமுறை படுத்த அடுத்த நாள் கடைக்கு கிளம்பியப் போது கார்த்திக்குடைய மனம் வலித்தது!
அதெல்லாம் போதாதென்று முன் தினம் அத்விதா சொன்ன சூடான வார்த்தைகள் வேறு அவனை இப்போதும் காயப் படுத்திக் கொண்டே இருந்தது!
காதல் என்ற உணர்வு ஏன் இப்படி கொல்கிறது???
வலியும் வருத்தமுமாக காலையிலேயே ஸ்டெஃப்பான் சூப்பர் மார்க்கெட் வந்து அத்விதா வருவதற்காக காத்திருந்தான் கார்த்திகேயன்...
அத்விதாவிடம் எப்படி பேசுவது என்றே அவனுக்கு குழப்பமாக இருந்தது. என்ன ஆனாலும் அவளை புண் படுத்தி விடக் கூடாது என்று மட்டும் யோசித்து வைத்தான்...
கார்த்திகேயன் முள்ளின் மேல் நிற்பவனைப் போல ஒவ்வொரு வினாடியையும் கடத்த, எப்போதும் போல காலை ஒன்பது மணிக்கு அத்விதா வரவில்லை! ஏன் அவள் வரவில்லை என்றுப் புரியாத நிலையிலேயே அவன் இருக்க, பகல் பொழுதுக் கடந்தப் பிறகும் அத்விதா வரவில்லை...!
அது வரை மனதில் அடிக்கும் புயலை வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாக ஸ்டெஃப்பானுக்கு கடையை அலங்கரிக்க உதவிக் கொண்டிருந்த கார்திகேயனால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை...
“இன்னைக்கு அத்வி வரலையா எல்ஸீ ஆன்ட்டி?” என்று பெரியவளிடம் கேட்டான்.
“நோ, கேடி. அவளுக்கு இன்னும் உடம்பு சரி ஆகலையாம்... நேத்து நைட்டே போன் செய்து சொன்னா... நானும் ரெஸ்ட் எடுத்துட்டு உடம்பு சரியானப் பிறகு வான்னு சொல்லிட்டேன்...” என்றார் எல்ஸீ.
“என்ன ஆச்சு அவளுக்கு? அவ உடம்புக்கு என்ன?” அக்கறையுடன் கேட்டான் கார்த்திகேயன்.
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
madhu ena solla poranka