நீலாம்பரி ஏர்ப்போர்ட்டுக்குள் அழகாக நடந்து வந்து கொண்டிருந்த சமயம் கள்ளழகருக்கு எதிராக வரிசையாக போடப்பட்டிருந்த சேர்களில் ஒன்றில் அவள் வந்து அமர்ந்துக் கொள்ள இன்னும் வசதியாக போய்விட்டது அழகருக்கு. அவன் இன்னும் அதிகமாக கூர்மையாக அவளை பார்க்கலானான்.
அவனுடன் போட்டி போட முடியாவிட்டாலும் ஏதோ பார்த்தான் மொட்டையன்.
சித்ரா பௌர்ணமி போன்ற உருண்டையான முகம், வெண்மையை முகத்தில் அப்பியிருந்தாள். அவளது முட்டைக்கண் அந்த முகத்திற்கு எடுப்பாக இருந்தது. கண்களை உருட்டி உருட்டி அவள் பார்த்த போது அழகர் தன் ஒரு கையால் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டான். அதைப் பார்த்த மொட்டையன்
”பாஸ் என்னாச்சி நெஞ்சுவலியா”
“ம்ஹூம் அவள் கண்ணால என் மனசை சாய்க்கறா”
“ஆனா அவள் உங்களை பார்க்கலையே”
“பார்த்ததா நினைச்சிக்க நான் சொல்றது விளங்கும்” என சொல்ல அவனும் அந்த அனுபவத்தை நினைத்துப் பார்த்துச் சிலாகித்தான்.
கருகருவென அவளின் இருவிழிகள் அங்கும் இங்கும் அலைய அழகர் அந்த கண்களில் மாட்டிக் கொண்டு தவித்தான்.
கூர்மையான நாசி, நெற்றியில் சிறிய பொட்டு, அது கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் ஏதோ வைத்திருந்தாள். இரு புருவங்களும் வில் போல வளைந்திருந்தது. பெண்கள் செய்துக் கொள்ளும் மேக்கப் ஒன்று கூட அவளிடம் இல்லை. இயல்பான பெண்களுக்கு இருக்கும் அழகான புருவங்கள், 1 நிமிடத்தில் 40 முறை இமைகளை மூடித்திறந்து அவள் வேடிக்கைப் பார்ப்பதை எண்ணிக் கொண்டிருந்தான்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.