(Reading time: 5 - 9 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 04 - பிந்து வினோத்

04. கண்கள் முழுதும் உந்தன் கனவே...

ன்று சனிக் கிழமை...

வழக்கம் போல் லேட்டாக தூங்கி எழுந்து, தலைக்கு குளித்தாள் பாரதி! பின் பொறுமையாக காலை உணவை கொறித்து விட்டு, தன் நீண்ட கூந்தலை விரித்துப் போட்டு காய விட்ட படி ஹாஸ்டல் அறையில் அமர்ந்திருந்தாள். திடீரென கீழே இருந்து சத்தமாக ஒலித்த அந்த குரலை கேட்டு ஆச்சர்யப் பட்டாள்.

"பாரதி... விசிட்டர் வந்திருக்காங்க...!"

பொதுவாக பாரதியை ஹாஸ்டலில் பார்க்க பவித்ரா அவள் கணவனுடன் எப்போதேனும் வருவதுண்டு.. மற்றபடி பாரதியே நேரம் கிடைக்கும் போதெல்லாம் பவித்ராவின் வீட்டுக்கு சென்று விடுவாள். இன்றும் மதிய உணவிற்கு மேல் பவித்ராவின் வீட்டிற்கு செல்லலாம் என்று தான் திட்டம் வைத்திருந்தாள்.

பவித்ராவை தவிர பாரதியை சந்திக்க யாரும் இதுவரை ஹாஸ்டலுக்கு வந்ததில்லை... ஆனால் பவித்ரா இந்த நேரத்தில் வர மாட்டாளே?

இப்படி மனதில் சற்றே குழம்பியபடி, தன் அறை இருந்த மூன்றாம் மாடியில் இருந்து படிகளில் மெதுவாக இறங்கி வந்தாள் பாரதி. கீழே வந்து விடுதி ஆயாவை கேள்வியோடு நோக்கினாள். அவளின் கேள்வியை புரிந்துக் கொண்டு,

"அதோ அவர் தான் உன்னை பார்க்க வந்திருக்கார்...” என்ற பதிலை வாங்கி விட்டு, ஆச்சர்யமும் ஆர்வமுமாக திரும்பி பார்த்தவள், அங்கே விவேக் நிற்பதை கண்டு திகைத்தாள்.

ஆனாலும் சீக்கிரமே தன்னை சுதாரித்துக் கொண்டு, தனக்கே உரிய மிடுக்குடன், விவேக்கின் அருகே சென்று,

"என்ன ஆச்சு சார்? மதுவை பத்தி ஏதாவது கேட்க வந்தீங்களா?" என்று வினவினாள்.

3 comments

• 🌹 உன்னருகே நான் இருந்தால்...🌹

உங்கள் எழுத்தின் தீவிர ரசிகை நான்...

கை கொள்ளா பக்கங்களோடு உங்கள் எழுத்துக்களால் எங்களை வசியம் பண்றீங்க...

நான் படித்த நாவல்களில் யாரோட ஹீரோ உங்களுக்கு first பிடிக்கும்னு கேட்டால்... நான் பிந்து வினோத் ஹீரோன்னு சந்தோஷமா... சத்தமா... சொல்வேன்...

நான் இந்த நாவலை எத்தனை முறை வாசித்தேன்னு எனக்கே தெரியாது...

உறவுகளுக்குள் உள்ள அன்பை ரொம்ப அழகா சொல்வீங்க...

அதை வாசிக்கும் போது என் குணங்களில் உள்ள பிழைகளை நானே சரிசெயதிருக்கிறேன்...

உங்கள் பெயர் தாங்கிய புத்தகங்களை நூலகத்தில் பார்க்கும் போது இந்த சத்தம் தான் காதில் கேட்கும்...

😉 அது பம்பாய் படத்தில் அரவிந்தசாமி... மனீஷா... meet பண்ணும்போது வருமே... அந்த இசை... 😍😍😉 எனக்காக கேட்கறீங்களா...?

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.