(Reading time: 5 - 9 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"சொல்லுங்க சார்... என்ன விஷயம்? மது நல்லா தானே படிக்கிறாள்?" என்று விசாரித்தாள்.

"நான் தான் சொன்னேனே மது பத்தி பேச வரலைன்னு..."

"அப்போ... நீங்க இன்னும் காலேஜில நடந்த விஷயத்தை மறக்கலையா? அதைப் பத்தி பேச வந்தீங்களா?"

சற்றே ஆச்சர்யத்தோடு ஒலித்த பாரதியின் கேள்வியை கவனித்த விவேக்,

"நான் மறக்குறது இருக்கட்டும்... நீங்க மறந்துட்டீங்களா??" என்று அவளிடம் கேட்டான்.

ஆம் என்பது போல் தலை அசைத்த பாரதி,

"ஞாபகம் வச்சுக்குற மாதிரி அன்னைக்கு என்ன நடந்தது? மறக்க வேண்டிய விஷயங்கள் தானே நடந்தது...." என்றாள்.

அவளின் குரலில் மெலிதாக இழையோடிய கசப்பை உணர்ந்தவனாய், குரலை தணித்து,

"சாரி பாரதி...." என்றான் விவேக்.

வழக்கத்திற்கு மாறான அந்த தணிந்த குரலோ, அல்லது அதில் இருந்த கனிவோ, ஏதோ ஒன்று பாரதியை சற்று நேரம் வாயடைக்க செய்தது. ஆனால் உடனேயே தன்னை நிதானித்துக் கொண்டவளாய்,

"பரவாயில்லை சார்... ஏதோ கோபத்தில நடந்தது... அதைப் பத்தி திரும்ப ஏன் பேசனும்..." என்றாள்.

"இல்லை... பார்த்திபன் மேல கோபப் படாதீங்க... அவன் மேலே எந்த தப்பும் இல்லை... நான் தான் அவன் கிட்ட ஏதேதோ சொல்லி குழப்பிட்டேன்..."

3 comments

• 🌹 உன்னருகே நான் இருந்தால்...🌹

உங்கள் எழுத்தின் தீவிர ரசிகை நான்...

கை கொள்ளா பக்கங்களோடு உங்கள் எழுத்துக்களால் எங்களை வசியம் பண்றீங்க...

நான் படித்த நாவல்களில் யாரோட ஹீரோ உங்களுக்கு first பிடிக்கும்னு கேட்டால்... நான் பிந்து வினோத் ஹீரோன்னு சந்தோஷமா... சத்தமா... சொல்வேன்...

நான் இந்த நாவலை எத்தனை முறை வாசித்தேன்னு எனக்கே தெரியாது...

உறவுகளுக்குள் உள்ள அன்பை ரொம்ப அழகா சொல்வீங்க...

அதை வாசிக்கும் போது என் குணங்களில் உள்ள பிழைகளை நானே சரிசெயதிருக்கிறேன்...

உங்கள் பெயர் தாங்கிய புத்தகங்களை நூலகத்தில் பார்க்கும் போது இந்த சத்தம் தான் காதில் கேட்கும்...

😉 அது பம்பாய் படத்தில் அரவிந்தசாமி... மனீஷா... meet பண்ணும்போது வருமே... அந்த இசை... 😍😍😉 எனக்காக கேட்கறீங்களா...?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.