“இது ரொம்ப இம்பார்டன்ட்! இந்த ப்ராஜக்ட் நமக்கு கிடைச்சா நம்ம கம்பெனிக்கு பெரிய ப்ரேக்-த்ரூ’வா இருக்கும்...” என்று வேலையில் ஆழ்ந்து மும்முரமாக மீட்டிங்கில் பேசிக் கொண்டிருந்த மனோஜ் அவனின் மொபைல் திடீரென ம்யூசிக் இசைக்கவும், அதை கவனித்து, ஒலித்துக் கொண்டிருந்த அலாரத்தை நிறுத்தினான்... பின்,
“உங்க எல்லோருக்கும் ஓகே’ன்னா, லெட் அஸ் டேக் 5 மினிட்ஸ் ப்ரேக்... அதுக்கு அப்புறம் பக்காவா ப்ளான் செய்வோம்... வீ ஹாவ் டு நெயில் இட்...” என்றான்.
அனைவரும் அவன் சொன்னதை சம்மதித்தார்கள்... ஒரு சிலர் ப்ரேக்கிற்காக எழுந்துச் சென்றார்கள்... ஒரு சிலர் அங்கேயே இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார்கள்.
மனோஜ் போனுடன் எழுந்து அறையின் ஓரமாக சென்றான்... அவன் மஞ்சுவை அழைத்து விசாரிக்கும் நேரமிது.. அதற்காக தான் அலாரம் செட் செய்து வைத்திருந்தான்...
அவன் போன் செய்ததும் முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்று,
”ஒன் மினிட் லேட் மேனேஜர்...” என்றாள் மஞ்சு.
அவள் குரலில் கலந்து இருந்த மகிழ்ச்சி மனோஜின் மனதை மெல்லிய தென்றலாக இதமாக வருடிச் சென்றது.
“சாப்பிட்டியா pbs??”
“சாப்பிடலைன்னு சொன்னா என்ன செய்வீங்க??? உடனே கிளம்பி வந்து ஊட்டி விடுவீங்களா??”
அவளின் கேள்வியில் இருந்த கேலியும் சிரிப்பும் மனோஜை என்னவோ செய்தது...
“ஐ லவ் யூ pbs...”
மஞ்சு சிரித்தாள்...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Cool and interesting updates Bindu ma'am 👏👏👏👏👏👏👏
Rendu perum situation-i nalla handle panuranga...Indha rendu aunties konjam kuda adjust panama ippadi irukangale...
Amudha kuda stay pana Manju accept panipangala....
Look forward to see what happens.next.
Thank you.