(Reading time: 12 - 23 minutes)
Manasa Theevu
Manasa Theevu

தொடர்கதை - மானசா தீவு – 07 - விஜேஜி

குழந்தைகள் எல்லாம் சாப்பிட்டு கொண்டிருந்தது.

  

அதைப் பார்த்துக் கொண்டிருந்தான், கார்த்திக். குழந்தைகள் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டான், ஒவ்வொரு குழந்தையையும் கன்னத்தைத் தடவி தன் மேல் வைத்துக் கொண்டு சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தான்.

  

" வா கார்த்திக், சாப்பிட்டு விட்டு போய் கொஞ்ச நேரம் தூங்கு."

  

அவன் எல்லா குழந்தைகளுக்கும், ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு எழுந்து சென்றான்.

  

மாதவனும், " ஞான் போய், கொஞ்சம்  ஜோலியை பார்த்துட்டு வரேன் " என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு சென்றான்.

  

இரவு, அவள் தம்பி கார்த்திக்கை ஹாஸ்பிடலில் விட்டு விட்டு, அம்மாவை கூட்டிக் கொண்டு வர அவள் அப்பாவின் ரூமுக்கு சென்றார்கள் , மானசாவும், மாதவனும்.

  

அவள் அப்பாவிற்கு நினைவு திரும்பி இருந்தது. அவள் உள்ளே நுழைந்தவடன், கண்களை மூடிக் கொண்டார்.

  

அவரைப் பார்த்து விட்டு, " அம்மே, அச்சனுக்கு இன்னும் நினைவு வரலியா? " என்று கேட்டாள் மாணசா.

  

"நினைவு வந்துடுத்து, ஆனா வலிக்கு மருந்து கொடுத்து இருக்கு இல்லையா, அதான் கொஞ்சம் தூக்கம்…" என்று இழுத்தார் அவள் அம்மா, அவருக்குத் தெரியும் வேண்டுமென்றே, தன் கணவன் இவர்கள் வந்தது தெரிந்தே, கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார் என்று, ஆனால் அதை எப்படி தன் மகள், மருமகனிடம் சொல்வது என்று…

  

"சரி அம்மா அச்சன்  உறங்கட்டும் நாம கிளம்பலாம், நாளைக்கு வந்து அச்சனை நோக்கலாம், கார்த்திக் நாங்கள் கிளம்பறோம்." என்று கூறினான் மாதவன்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.