(Reading time: 12 - 23 minutes)
Manasa Theevu
Manasa Theevu

என்று கேட்டான் மாதவன்.

  

“அதுவும் சரிதான் நாங்களே அப்பப்ப வந்துட்டு போறோம் எங்க மானசாவை நல்லபடியா பார்த்துக்குங்க” கண்ணீர் உகுத்தார் அவள் அம்மா.

  

இப்படியே குழந்தையும் பிறந்து விட்டது…..

  

பன்னிரெண்டு ஆண்டுகள். பெரிய பெண் சகானாவை மேல்படிப்புக்கு அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தான் மாதவன் சின்ன வயசிலேயே எல்லா குழந்தைகளையும் ஹாஸ்டலில் போட்டுவிட்டான். மானஸாவிற்கு மிகுந்த கோபம் குழந்தைகளை ஹாஸ்டலில் விடவேண்டாம் என்று எவ்வளவு கூறியும் அவன் கேட்கவில்லை. ஆனால் அவனோ, இத்தனை குழந்தைகளையும் வீட்டில் வைத்து கட்டுப்பெட்டியாக வைத்திருப்பது கட்டுப்பாட்டோடு வைத்திருப்பது மிகவும் கஷ்டம் அதனால் ஹாஸ்டலில் விட்டால் அவர்கள் நல்லபடியாக வளர்வார்கள் என்று அவன் ஹாஸ்டலில் விட்டு விட்டான.

  

மானசாவிற்கு தீவிலுள்ள ஹோட்டல் மற்றபடி இருக்கும் அத்தனை வியாபாரங்களையும்,  அவளை நிர்வகிக்க செய்ய விட்டிருந்தான். அவன்தான் அத்தனை வியாபாரிகளுக்கும் மேனேஜிங் டைரக்டர் அதனால், அவள் ரொம்ப பிசியாக இருந்தாள்.

  

எல்லா குழந்தைகளும் ஹாஸ்டலுக்கு சென்றவுடன், மனைவியுடன் தான் வெளிநாடு செல்லும் போது அவளையும் கூட்டி கொண்டு சென்றான். கல்யாணம் ஆனவுடன், தன் மனைவியுடன் என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று நினைத்தானோ அத்தனையும் அனுபவித்தான்.

  

அன்று, அவர்கள் அப்பாவிற்கு ஆபரேஷன் ஆகி அவர்கள் வீட்டிற்கு வந்து போனவுடன் அவ்வப்போது அவர்கள் வந்து போவது வழக்கமாகியது . ஒரே வருடத்தில், அவள் தம்பி கார்த்திக் படிப்பு முடிந்தவுடன், மாதவன் தங்களுடைய கம்பனியில் வேலை கொடுத்தான்.

  

கார்த்திக் திடீரென்று ஒரு பெண்ணுடன் மானசியின் வீட்டிற்கு வந்தான்.

  

" அடேய், கார்த்திக், யாருடா இது?" என்று அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.