(Reading time: 5 - 9 minutes)
Un katal iruntal potum
Un katal iruntal potum

இதற்கு எதிர்மறையாக 'லாஜிகல்லி' இது எல்லாம் சரி இல்லை என்ற எண்ணமும் எழுந்தது...

  

ஆனால், அதை எல்லாம் விட ஒரு பெரியக் கேள்வி அவளுக்குள் எழுந்திருந்தது!

   

அவனுக்கும் அவளின் நினைவு இருக்கிறதா???

  

மனதில் ஓடிய அந்த கேள்வியுடனே, அவனின் கையைப் பற்றி குலுக்கினாள் அவள்.

  

புன்னகை மாறாது இருந்தவன், அவளின் கையை உடனே விடுவிக்காமல் மேலும் ஒன்றிரண்டு வினாடிகள் கழித்தே விடுவித்தான்...

  

கன்னத்தில் ஏறிய சூட்டினை உணர்ந்த சௌந்தர்யா, தன்னுடைய முகம் நிறம் மாறுவதை காட்ட விரும்பாமல், தோழி பக்கம் திரும்பி பேசினாள்.

  

“ஃபைல் டீடைல்ஸ் சொல்லி இருந்தாலே போதுமே, ஷீலா, நான் ஹெல்ப் செய்திருப்பேன்!”

  

சௌந்தர்யாவின் மனதைப் புரிந்துக் கொண்டவனைப் போல சதானந்தனின் முகத்தில் இருந்தப் புன்னகை பெரிதானது...

  

அதைக் கடை கண்ணில் பார்த்தவளுக்கு அந்த புன்சிரிப்பை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆவல் பேரலையாக தோன்றியது...

  

கஷ்டப் பட்டு அவள் மனதை கடிவாளமிடும் போது ஷீலா ஏதோ சொல்லி முடித்திருந்தாள்...

  

தோழி என்ன சொன்னாள் என்பது சௌந்தர்யாவின் காதில் விழுந்திருந்தால் தானே பதில் சொல்ல?!?! இப்போது என்ன பதில் சொல்வது என்று அவள் யோசிக்கும் போதே, மீண்டும் அவளுக்கு உதவுபவனாக,

  

“பரவாயில்லை, நான் எப்படியும் ஃபாலோ அப் செய்யனுமே! உங்க அறிமுகம் கிடைச்சதும் நல்லது தான்!” என்றான் சதானந்தன்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.