(Reading time: 5 - 9 minutes)
Un katal iruntal potum
Un katal iruntal potum

  

“பாலோ அப் எல்லாம் செய்ய தேவை இருக்காது, சதா. இவங்க டிபார்ட்மென்ட் மக்கள் சுறுசுறுப்பா வேலை செய்றவங்க, சீக்கிரம் வேலை முடிஞ்சிடும்!” என்றாள் ஷீலா

  

“ரொம்ப நல்லதா போச்சு... ஆனால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நாள் ஆனாலும் கூட பரவாயில்லை... எனக்கு எந்த அவசரமும் இல்லை...” என சௌந்தர்யாவைப் பார்த்து சொன்ன சதானந்தன், ஷீலா பக்கம் பார்த்து,

  

“எனக்கு சென்னையில வேற கொஞ்சம் வேலை இருக்கு, அதனால சொல்றேன்...” என்று முடித்தான்.

  

“அப்போ குட்! நீ என்ன சொல்ற சௌ?” என ஷீலா தோழியிடம் வினவினாள்!

  

சௌந்தர்யா அதற்கு பதில் சொல்லும் முன்,

  

“சௌந்தர்யான்ற அழகானப் பேரை ஏன் இப்படி ஷார்ட் செய்து கொலை செய்ற, ஷீலா?” என்றான் சதானந்தன்.

  

ஷீலா முதல் முறையாக கேள்வி + ஆர்வத்துடன் அவனைப் பார்த்தாள்.

  

ஆனால் அவன் அவளின் பார்வையை கவனித்தால் தானே! ஷீலாவைக் கண்டுக் கொள்ளாமல் அவன் மும்முரமாக சௌந்தர்யாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

  

‘ஓ! இது தானா சீக்கிரம் முடிக்க வேண்டுமென்ற வேலை கொஞ்சம் லேட் ஆனாலும் பரவாயில்லை என்று ஆனதன் ரகசியம்?’ என மனதுக்குள் யோசித்த ஷீலா...

  

ஆர்வத்துடன் தோழிப் பக்கம் பார்த்தாள்...

  

சௌந்தர்யா சதா'வின் பார்வையின் வேகத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள்...

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.