மறுநாள் பொழுது விடிந்ததும் ஜீவா கண்கள் திறந்துப் பார்த்தான், பக்கத்தில் மனைவியில்லை.
”சக்தி சக்தி” என சத்தமாக அழைத்தான் அவனது அழைப்புக்கு அதிசயமாக பதிலும் வந்தது கொலுசு வடிவில். சக்திதான் வந்து அவன் முன் நின்றாள் அவள் நின்றதை நினைத்து நம்ப மறுத்தவன்
”இது கனவா இல்லை நிஜமா“ என அவளை பார்த்துக் கேட்க அந்நேரம் கையில் குழம்பு கரண்டியுடன் வந்திருந்தபடியால் அந்த கரண்டியை வைத்தே அவனது தலையில் லொட் என தட்டினாள், அதில் அவனும் இது நிஜம் என எண்ணி தலையை தடவியபடியே அவளைப் பார்த்து ஈஈ என இளித்தான் அவளோ
”எதுக்கு கூப்பிட்ட”
”இல்லை நான் கூப்பிட்டா நீ வருவியா மாட்டியான்னு தெரிஞ்சிக்கதான் கூப்பிட்டுப் பார்த்தேன்” என சொல்ல அவளோ கடுப்பாகி இம்முறை பலமாக அவனது தலையில் கரண்டியால் லொட் என தட்டிவிட்டு சென்றே விட்டாள், அந்த அடியில் அவன் ஆஅ என மெதுவாக அலறிவிட்டு அவசரமாக தனது தலையை நன்றாக தேய்த்து விட்டுக் கொண்டபடியே அறையை விட்டு வெளியேறி வர சாந்தியோ அவனைப் பார்த்து இளப்பமாக சிரித்தாள் அதைப்பார்த்த உடனே அவன் கையை இறக்கிவிட்டு
”என்ன சிரிப்பு” என கேட்க
”உனக்குத் தேவைதான்டா இதெல்லாம்”
”எதெல்லாம் எதை பத்தி பேசற” என புரிந்தும் புரியாமல் பேசி வைக்க அவரோ
”அவள்கிட்ட நீ அடிவாங்குவேன்னு நான் சொன்னப்ப அடிச்சா அடிக்கட்டும்னு சொன்னியே, இப்ப என்னாச்சி அடி பலமா தலை வீங்கிடுச்சா என்ன வேணும்னா டாக்டர்கிட்ட போலாமா” என கிண்டலாகச் சொல்லிவிட்டு கலகலவென சிரிக்க ஜீவா கடுப்பானான்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.