(Reading time: 5 - 9 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பேசுறோம்... அவளை சம்மதம்ன்னு சொல்ல வைக்குறோம்..."

  

"வேண்டாம் அம்மா... நீங்க செய்யும் எமோஷனல் ப்ளாக் மெயிலை என்னால செய்ய முடியாதா என்ன?"

  

"பாசமா பேசி மனசை மாற்றுவது உனக்கு ப்ளாக் மெயிலா? சொல்வேடா சொல்வ... சரி ஏதோ செய்... கடைசியில் என் கிட்ட வந்து தான்., அம்மா கொஞ்சம் ஹெல்ப் செய்ங்கன்னு கெஞ்சப் போற..."

  

"அப்படி ஒரு தேவை வந்தால் நீங்க ஹெல்ப் செய்ய மாட்டீங்களா என்ன? நீங்க தான் என் செல்ல அம்மா ஆச்சே..."

  

"டேய் உன் பிஸ்னஸ்மேன் வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம்... நானும் இத்தனை வருஷமா கம்பெனி நடத்துறவ தான்..."

  

"சரி சரி அம்மா... கூல் டவுன்..."

  

"சீக்கிரமா பேசி பாரதி மனசை மாத்தும் வழியைப் பாரு. அப்புறம் நடுவில் வேற யாரவது வந்திறப் போறாங்க... அப்படி ஏதாவது நடந்தால், பழையப் படம் ஸ்டைலில், எங்கிருந்தாலும் வாழ்கன்னு நீ பாட வேண்டியது தான்... செய்றதை சீக்கிரமா செய்... நான் கிளம்புறேன்.. குட் நைட்..."

  

சொல்லி விட்டு கற்பகம் அங்கிருந்து கிளம்பினாள்.

   

விவேக்கிற்கும் மூன்றாண்டுகள் எல்லாம் காத்திருக்கும் பொறுமை தனக்கு இருப்பதாக தோன்றவில்லை.

   

பாரதியின் அருகில் வெறும் பரிச்சயமான ஒருவனாக விலகி இருந்து பேசுவது அவனுக்கு இப்போதெல்லாம் ரொம்பவே கடினமாக இருந்தது. அவ்வப்போது அவளை சந்திக்காமல் கூட அல்லவா விலகி இருக்க வேண்டி இருக்கிறது... 

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.