This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ராதாவை பஸ் ஏற்றி அனுப்பி விட்டு, தனியாக வீடு நோக்கி நடந்தப் போது, தமிழ்ச்செல்வியினுள் மீண்டும் கேள்விகள் படை எடுத்தன.
மதுக்கடையில் குடித்து முடித்த மயக்கத்தில் சிலர் படுத்து அரற்றிக் கொண்டிருந்தனர்.
இதில் அந்த மாமன் மகனும் இருக்கிறானா என்று பார்க்கவும் தமிழ்ச்செல்விக்கு பிடிக்கவில்லை.
இந்த கல்யாணம் நடந்தால் அவளுடைய தினசரி வேலைகளில் ஒன்றாக, இவன் குடித்து இங்கே விழுந்துக் கிடக்கிறானா என்று பார்ப்பதும் சேர்ந்து விடும் போலிருக்கிறதே!
என்ன கொடுமை இது! அப்பா இறந்த துக்கத்தை மறக்கும் முன் எதை எல்லாம் நினைத்து அவள் வேதனைப் பட வேண்டி இருக்கிறது.
ராதா சொல்வதுப் போல இந்த கிராமத்தில் தனியாக வாழ முடியாது. வேறு என்ன செய்வது? ஷ்யாம் சுந்தர் சொன்னதுப் போல வேறு ஊர் சென்று வேலை தேடிக் கொள்ளலாமா?
அதையும் இந்த ஊர் தப்பாக தானே பேசும்?
ஆனால் ஊருக்காக என்று அவள் வாழ முடியுமா?
இப்போது மட்டும் என்ன? என்ன, ஏது என்று தெரியாமலே அவளும் ஷ்யாம் சுந்தரும் காதலிப்பதாக பேசிக் கொள்கிறார்கள் என்று ராதா கூட சொன்னாளே.
அவளுக்கு வேண்டியதை அவள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால், ஷ்யாம் சுந்தர் சொன்ன காதலை நம்பி போக அவளுக்கு மனம் வரவில்லை.
அவன் சொன்ன நட்பை நம்பி போகலாமா?
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.