This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ரச்னாவின் பதில் ஸ்ரேயான்ஷை சுனாமியாக தாக்கியது என்னவோ உண்மை... ஆனால் நிதானத்தை கடைப்பிடித்துக் கொண்டிருந்த ஸ்ரேயான்ஷ், அவளுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்றக் காரணத்திற்க்காக உடனடியாக எதையும் சொல்லவில்லை... மாறாக, அவள் சொன்னதை வைத்து, வேக வேகமாக தன்னைத் தானே சுய-பரிசோதனை செய்துக் கொண்டான்...!
ரச்னாவின் பேச்சில் இருந்த உண்மை அவனுக்கு உரைத்தது...
ஸ்ரேயான்ஷ் அதை மறைக்க முயற்சிக்கவில்லை...
“நீ சொல்றது கரக்ட் தான், ரச்னா... அது லக்கி ப்ரேக் தான்... ஆனால் நான் என் தப்பை எப்போவோ உணர்ந்துட்டேன்...” என்றான் அதே நிதானத்துடன்!
ரச்னாவிற்கு அவனின் பதில் ஆச்சர்யத்தைக் கொடுத்தது... அதைக் காட்டிக் கொள்ளாது,
“ப்ச்...” என அலுத்துக் கொண்டாள்...
“நான் சொல்றது நிஜம், ரச்னா! அபியோட வைஃப் நீங்க ஆசைப்பட்ட மாதிரியே ரச்னா இப்போ உயிரோட இல்லை போதுமான்னு கேட்டப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா... ரொம்பவே வலிச்சுச்சுடா...”
“அபியோட வைஃப்னா, தீபாவா???”
முதல் முறையாக கோபம் இல்லாமல் ஆர்வம் பொங்க கேட்டாள் ரச்னா... தீபாவிடம் அவள் மேகமலையில் தங்கி இருப்பதை பற்றி சொல்லாதது, அப்போது தான் அவளின் நினைவுக்கு வந்து மனதை உறுத்தியது...!
“ம்ம்ம்.... அவங்க தான்...! முதல்ல, உன்னைப் பத்தி எதுவுமே சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க... ரொம்ப கெஞ்சிக் கேட்டதுக்கு அப்புறம் தான் நீ இந்தியா போனேன்னும், திடீர்னு கான்டாக்ட் இல்லாம போச்சுன்னும் சொன்னாங்க....”
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.