This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
I love you so much that I miss you when I close my eyes to blink.
“அத்தை, கோவிலுக்கு போகலாம்னு சொன்னேனே, இப்போ போகலாமா? ஹரீஷ் நீங்களும் வரீங்களா?” நிலா அவனை ப்ளீஸ் செய்ய விரும்புபவளாக பேச்சை மாற்றினாள்.
“இல்லை சுபி. நான் ப்ரோபஸர் மாதேஷ் கிட்ட பேசனும். நீங்க இரண்டுப் பேரும் போயிட்டு வாங்க.”
“நாமளே போகலாம் நிலா. இந்த சீரியல் முடியட்டும் போகலாம்,” – மஹா.
“அம்மா!!!!!” – ஹரீஷ் மீண்டும் அலற, நிலா எழுந்துக் கொண்டாள்.
“நீங்க பாருங்க அத்தை. நான் அதுக்குள்ளே போய் புடவை மாத்திட்டு வரேன்,” - நிலா அவர்கள் அறை நோக்கி நடக்க, ஹரீஷும் அவள் பின்னே வந்தான்.
“நீங்க இங்கே இருங்க ஹரீஷ். இன்னும் அந்த டோர் லாக் எனக்கு சரியா பிடிப்படலை. நான் சாரீ கட்டிட்டு கூப்பிடுறேன்”
பதிலாக தஞ்சாவூர் பொம்மை போல தலையை நங் நங் என்று ஆட்டினான் ஹரீஷ். ஆனால் நிலா பின்னாலே போகச் சொல்லி அவனின் மனம் அவனை பாடாய் படுத்தி எடுத்தது.
கஷ்டப்பட்டு மனதை கட்டுப்படுத்தி, மொபைலை கையில் எடுத்து அவனுடைய வெண்ணிலா ஆப்-பை திறந்தான். இதற்கு வேறு பெயரை மாற்ற வேண்டும். நிலாவிற்கு இந்த பெயர் பிடிக்கவில்லையே.
"அறிவு இருக்கா உங்களுக்கு? என்ன பேரு வைக்குறீங்க? நிலான்னு வர மாதிரி பேரு வச்சிருக்கீங்க. முதல்ல பேரை மாத்துங்க"
அன்று அவள் கோபப்பட்டு பேசியது இப்போதும் அவனுக்கு வருத்தத்தை கொடுத்தது. அவளுடைய பெயர் வருவதுப் போல ஆப்-பிற்கு பேர் வைக்க கூட அவனுக்கு உரிமை
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.