(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

ம்ம்ம்... நான் துரத்தினா உடனே அப்படியே திரும்பி போற ஆள் தான் நீங்க. சரி கதை பிடிச்சுதா? அதை சொல்லுங்க...

  

ரொம்ப பிடிச்சிருந்தது ரதி! உன்னோட ஹீரோயின்ஸ் எல்லோரும் சூப்பர். லாவண்யாவிற்கும் உன் கதை எல்லாம் ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். எனக்கு இப்படி கதை படிக்குற ஆர்வம் வர காரணமே அவள் தான்...”

  

பாரதியிடம் இருந்து உடனே பதில் வராது போகவே, அவளை தன் அணைப்பில் இருந்து விடுவித்து, அவளின் முகத்தைப் பார்த்தான் விவேக்...

   

பாரதி முகத்தில் இருந்த உணர்ச்சி என்ன? பொறாமையா? கோபமா??? விவேக் ஆவலுடன் பார்க்கும் போதே, பாரதி பேசினாள்.

  

இது அதே லாவண்யாவா?” எனக் கேட்டாள்.

  

பாரதியிடம் எப்போது லாவண்யா பற்றி பேசினோம் என்று மனசுக்குள் யோசித்துக் கொண்டே,

  

எதே லாவண்யா?” என பதில் கேள்வி கேட்டான் விவேக்.

  

உங்களை முதல் முதல் இம்பாக்ட் செய்தவள்... அன்னைக்கு சொன்னீங்களே, எல்லோரும் உங்களை ரிஜெக்ட் செய்றாங்கன்னு...”

  

ஓ! ஆமாம்... அவளே தான்...” என்று வாய் பேசிய போதும், விவேக்கின் மனம் மனைவியின் நினைவாற்றலை பாராட்டியது. அவனுக்கு அன்று லாவண்யாவின் பேரை சொன்னதுக் கூட நினைவில் இல்லை...

   

பாரதியின் முகத்தில் தெரிந்த பொறாமை ரேகைகள் மகிழ்ச்சியூட்ட, அவளை சீண்டுவதற்காகவே மேலே பேசினான்...

  

லாவண்யா ஒன் ஆஃப் எ கைண்ட் தெரியுமா? ஷி இஸ் எ கிரேட் பெர்சனாலிட்டி...”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.