(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

விவேக் தலையை அசைக்க,

   

இல்லை மாமா, நான் எப்போதும் போல் பஸ்ஸிலேயே வரேன்...” என்றாள் பாரதி.

  

இல்லை இல்லை... அதெல்லாம் வேண்டாம்...” என உடனடியாக மறுத்தான் விவேக்.

  

ஆமாம் பாரதி, காரிலேயே வா...” என்றாள் கற்பகம்.

  

இல்லை அத்தை, மது...” என இழுத்தாள் பாரதி.

  

மதுமதியின் முகத்தில் மெல்லிய 'கேர்ளிஷ்' புன்னகை தோன்றியது.

   

ஆமாம் அம்மா, என் ஃபிரென்ட்ஸ்க்கு நான் ஈவ்னிங் கார்ல லிஃப்ட் கொடுக்குறேன்னு சொல்லி இருந்தேன்... சின்ன அண்ணி எங்க லெக்சரர்... அவங்களும் எங்க கூட வந்தால்...” என சொல்லிக் கொண்டே உணவு மேஜையை சுற்றி கண்ணை சுழற்றினாள் மது.

  

அவள் சொல்ல வருவது புரிந்து, அங்கிருந்த அனைவருக்குமே சிரிப்பு வந்தது!!!

   

"சரி, சரி புரியுது மது! நம்ம வீட்டு இளவரசி இவ்வளவு பெரிய ஆள் ஆனது தான் எங்களுக்கு தெரியாம போயிடுச்சு... உன் ப்ளான் அப்படியே இருக்கட்டும்... நீ உன் ஃபிரென்ட்ஸ்க்கு லிஃப்ட் கொடு..." என கேலி கலக்க மகளுக்கு அனுமதி கொடுத்த நரேந்திரன், விவேக்கிடம்,

   

"விவேக், நீ பாரதியை ஈவ்னிங் காலேஜில் இருந்து பிக் அப் செய்ய முடியாதா? பாவம் அவ மட்டும் ஏன் பஸ்ஸில் வரனும்?” என்றார்.

  

அது ப்பா...” என யோசனையுடன் இழுத்தான் விவேக்.

  

ரொம்ப நடிக்காதடா! எப்போவும் நீ தானே மதுவை ஈவ்னிங் காலேஜ்ல இருந்து கூப்பிட்டுட்டு வருவ? இப்போ என்னவோ ரொம்ப தான் பிகு செய்ற?” என்றாள் கற்பகம்!

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.